Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

இரிடியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
77 ஆசுமியம்இரிடியம்பிளாட்டினம்
Rh

Ir

Mt
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
இரிடியம், Ir, 77
வேதியியல்
பொருள் வரிசை
பிறழ்வரிசை மாழைlகள்
நெடுங்குழு,
கிடை வரிசை,
வலயம்
9, 6, d
தோற்றம் வெண்மை
அணு நிறை
(அணுத்திணிவு)
192.217(3) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Xe] 4f14 5d7 6s2
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 32, 15, 2
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை திண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
22.42 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
19 g/cm³
உருகு
வெப்பநிலை
2739 K
(2466 °C, 4471 °F)
கொதி நிலை 4701 K
(4428 °C, 8002 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
41.12 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
563 கி.ஜூ/மோல்
வெப்பக்
கொண்மை
(25 °C)
25.10 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 2713 2957 3252 3614 4069 4659
அணுப் பண்புகள்
படிக அமைப்பு cubic face centered
ஆக்சைடு
நிலைகள்
2, 3, 4, 6
(மென் கார ஆக்சைடு)
எதிர்மின்னியீர்ப்பு 2.20 (பௌலிங் அளவீடு)
அயனாக்க ஆற்றல் 1st: 880 கிஜூ/மோல்
2nd: 1600 kJ/mol
அணு ஆரம் 135 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
180 pm
கூட்டிணைப்பு ஆரம் 137 pm
வேறு பல பண்புகள்
காந்த வகை no data
மின் தடைமை (20 °C) 47.1 nΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 147
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப நீட்சி (25 °C) 6.4 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K)
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி வடிவில்)
(20 °C) 4825 மீ/நொடி
யங்கின் மட்டு 528 GPa
Shear modulus 210 GPa
அமுங்குமை 320 GPa
பாய்சான் விகிதம் 0.26
மோவின்(Moh's) உறுதி எண் 6.5
விக்கர் உறுதிஎண்
Vickers hardness
1760 MPa (மெகாபாஸ்)
பிரிநெல் உறுதிஎண்
Brinell hardness]]
1670 MPa (மெகாபாஸ்)
CAS பதிவெண் 7439-88-5
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: இரிடியம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
189Ir செயற்கை 13.2 d ε 0.532 189Os
190Ir செயற்கை 11.8 d ε 2.000 190Os
191Ir 37.3% Ir ஆனது 114 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
192Ir செயற்கை 73.83 d β 1.460 192Pt
ε 1.046 192Os
192mIr செயற்கை 241 y IT 0.155 192Ir
193Ir 62.7% Ir ஆனது 116 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
194Ir செயற்கை 19.3 h β< 2.247 194Pt
195Ir செயற்கை 2.5 h β< 1.120 195Pt
மேற்கோள்கள்

இரிடியம் (Iridium) என்பது Ir என்ற மூலக்கூற்றுவாய்ப்பாடு கொண்டஒரு தனிமம் ஆகும். இத்தனிமத்தின்அணுஎண் 77 ஆகும். பிளாட்டினம் தொகுதியைச் சேர்ந்த இடைநிலைத் தனிமமான இது கடினமானதாகவும், நொறுங்கக்கூடியதாகவும் வெள்ளி தனிமத்தைப் போலவெண்மை நிறங்கொண்டதாகவும் உள்ளது.

ஒசுமியம் தனிமத்தை அடுத்து இரண்டாவது அடர்த்தி மிகுந்த தனிமமாக இரிடியம் கருதப்படுகிறது. 2000 °செல்சியசு வெப்பநிலைக்கு அதிகமான உயர்வெப்பநிலையிலும் இரிடியம் அரிப்பைத் தடுக்கும் ஒரு தனிமமாக உள்ளது. சில உருகிய உப்புக்களும் ஆலசன்களும் மட்டும் திடநிலை இரிடியத்தை அரிக்கும் தன்மை கொண்டவையாக உள்ளன என்றாலும், கடைசியாகப் பிரித்தெடுக்கப்படும் இரிடியம் தூள் மிகவும் வினைத்திறன் கொண்டதாகவும் எளிதில் தீப்பற்றக்கூடியதாகவும் காணப்படுகிறது.

இரிடியம் 1803 ஆம் ஆண்டு இயற்கையாகத் தோன்றும் பிளாட்டினத்துடன் காணப்படும் கரையாதமாசுக்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. முதன்மை கண்டுபிடிப்பாளரான சிமித்சன் டென்னண்ட் கிரேக்க தெய்வம் இரிசு என்பதைக் குறிக்கும் பெயரை மையமாகக் கொண்டு உருவகமாக இத்தனிமத்திற்கு இரிடியம் எனப் பெயரிட்டார். இரிசு தெய்வத்திற்கு அடையாளமாக வானவில்லைக் குறிப்பிடுவர். இரிடியத்தின் உப்புகளும் பலவண்ணங்களில் காணப்படுகின்றன. இரிடியம் பூமியின் மேற்பரப்பில் உள்ள அரிதான தனிமங்களில் ஒன்றாகும், இதன் ஆண்டு உற்பத்தி மற்றும் நுகர்வு மூன்று டன்கள் மட்டுமேயாகும். 191Ir மற்றும் 193Ir என்ற இரண்டு ஐசோடோப்புகள் மட்டுமே இரிடியத்திற்கான ஐசோடோப்புகள் ஆகும். நிலைப்புத்தன்மை கொண்ட ஐசோடோப்புக்களும் இவை மட்டுமேயாகும். பிந்தைய இரண்டாவதாகக் கூறப்பட்ட ஐசோடோப்பு புவியில் மிக அதிகமாகஉள்ளது.

இரிடியம் தொழில் துறை வினைவேகமாற்றிகள் மற்றும் ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் ஏராளமான கரிமசேர்மங்களை உருவாக்குகிறது என்றாலும் இது குளோரினுடன் சேர்ந்து உருவாகும் சேர்மங்களும் அமிலங்களும் மிகமுக்கியமானபயன்பாட்டில்உள்ளன. உயர்செயல்திறன் மின் அடைப்புகள், அதிகவெப்பநிலை குறைக்கடத்திகளின் மீளுருவாக்கச் செயல்முறைக்குப் பயன்படும் மட்பாண்டங்கள், குளோரால்கலி செயல்முறைக்குத் தேவையான மின்வாய்கள் ஆகியவற்றில் இரிடியம் உலோகம் பயன்படுத்தப்படுகிறது.

பூமியின் மேற்புறத்தில் கிடைப்பதைக் காட்டிலும் மிக அதிகமானஅளவில் விண்கற்களில் இரிடியம் காணப்படுகிறது[1]. இந்த காரணத்தினாலேயே கிரீத்தேசிய – பலியோசீன் காலப்பகுதியின் நிலவியல் எல்லையில் காணப்பட்ட களிமண் அடுக்கில் அசாதாரணமான அதிக அளவு இரிடியம் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. புவிக்கப்பாலிருந்து மிகப்பெரிய ஒரு பொருள் பூமியின் மீது மோதியதால் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டையனோசர் போன்ற உயிரினங்கள் அழிந்திருக்கலாம் என்ற ஆல்வாரெசு கோட்பாடுதோற்றம் பெற இதுவே அடிப்படையாகஅமைந்தது. இதே போல பசிபிக் பெருங்கடலின் உள்ளகத்தில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் காணப்படும் இரிடியம் அளவுகளில் உள்ள முறன்பாடுகள் எல்டானின் என்ற விண்கல்லின் தாக்கம் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்கலாம் எனகருதப்படுகிறது.

கிரசுடல் பாறைகளில் காணப்பட்டதைவிட புவியில் காணப்படும் இரிடியத்தின் அளவு அதிகமாகும், ஆனால் மற்ற பிளாட்டினக்-குழு உலோகங்களோடு ஒப்பிடுகையில் இதன் அளவுகுறைவாகும். புவிமேலோட்டிலிருந்து கீழே செல்லச் செல்ல இரும்புடன் பிணைக்கப்பட்டுள்ள இரிடியத்தின் உயர் அடர்த்தி மற்றும் பண்புகள் இதைவெளிப்படுத்துகின்றன.

பண்புகள்

[தொகு]

பிளாட்டினம் குழுவைச் சேர்ந்த உலோகங்களில் இரிடியமும் ஓர் உறுப்பினர் ஆகும். பிளாட்டினத்தைப் போல இரிடியம் வெள்ளை நிறத்துடன் காணப்படுகிறது. ஆனால் சிறிதளவு மஞ்சள் கலந்த வெண்மை நிறமாக இது உள்ளது. இதன் கடினத்தன்மை, நொறுங்கும் தன்மை மற்றும் மிக உயர்ந்த உருகு நிலை போன்ற காரணங்களால் திட இரிடியத்தை இயந்திரங்களில், வடிவமைப்புகளில் பயன்படுத்தி வேலை செய்வது கடினமாக உள்ளது. இதனால் இரிடியத்தின் தூள் உலோகம் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. 1,600 ° செல்சியசுக்கு (2,910 ° பாரன்கீட்டு) க்கும் அதிகமான வெப்பநிலையில் காற்றில் நல்ல இயந்திரப் பண்புகளை பராமரிப்பதற்கான ஒரே உலோகமாக இரிடியம் அறியப்படுகிறது. எல்லா தனிமங்களுடனும் ஒப்பிடுகையில் இது 10 ஆவது மிக அதிகமான கொதி நிலை கொண்ட தனிமமாக அறியப்படுகிறது. மற்றும் 0.14 கெல்வினுக்கும் கீழே உள்ள வெப்பநிலையில் இரிடியம் ஒரு மீக்கடத்தியாக மாறுகிறது[2].

மற்ற உலோகங்களுடன் ஒப்பிடுகையில் இரிடியத்தின் நெகிழ்ச்சி குணகம் ஓசுமியத்திற்கு அடுத்து இரண்டாவது உயர் மதிப்பைக் கொண்டுள்ளது. அடர்த்தியிலும் ஒசுமியத்தைக் காட்டிலும் சிறிதளவு மட்டுமே குறைந்த மதிப்பை இரிடியம் பெற்றுள்ளது [3][4] அடர்த்தியில் உள்ள இச்சிறிய வேறுபாடும் துல்லியமாக அளவிடுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக ஏற்பட்டது என்ற கருத்தும் தோன்றியது. இவ்விரு தனிமங்களில் எது அடர்த்தி குறைவானது என்பதை நிர்ணயிப்பதில் சில தெளிவற்ற நிலைகள் ஏற்பட்டன [5]. ஆனால், எக்சு கதிர் படிகவியல் ஆய்வுகள் மூலம் கணக்கிடப்பட்ட அடர்த்தியானது இரிடியத்திற்கு 22.56 கிராம் / செ.மீ3 என்றும் ஒசுமியத்திற்கு 22.59 கிராம் / செ.மீcm3 என்றும் உறுதி செய்யப்பட்டது [6].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Becker, Luann (2002). "Repeated Blows". Scientific American 286 (3): 77–83. doi:10.1038/scientificamerican0302-76. Bibcode: 2002SciAm.286c..76B. http://www.miracosta.edu/home/kmeldahl/articles/blows.pdf. பார்த்த நாள்: January 19, 2016. 
  2. Kittel, C. (2004). Introduction to Solid state Physics (7th ed.). Wiley-India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-265-1045-5.
  3. Arblaster, J. W. (1995). "Osmium, the Densest Metal Known". Platinum Metals Review 39 (4): 164. http://www.platinummetalsreview.com/dynamic/article/view/pmr-v39-i4-164-164. பார்த்த நாள்: 2018-04-12. 
  4. Cotton, Simon (1997). Chemistry of Precious Metals. Springer-Verlag New York, LLC. p. 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7514-0413-5.
  5. Lide, D. R. (1990). CRC Handbook of Chemistry and Physics (70th ed.). Boca Raton (FL):CRC Press.
  6. Arblaster, J. W. (1989). "Densities of osmium and iridium: recalculations based upon a review of the latest crystallographic data" (PDF). Platinum Metals Review 33 (1): 14–16. http://www.platinummetalsreview.com/pdf/pmr-v33-i1-014-016.pdf. பார்த்த நாள்: 2018-04-12. 

புற இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
இரிடியம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிடியம்&oldid=3953507" இலிருந்து மீள்விக்கப்பட்டது