Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

மாட்ட ஹரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாட்ட ஹாரி
Mata Hari
1906 இல்
பிறப்புமார்கரெத்தா கெர்த்துரூதா செல்லே
(1876-08-07)7 ஆகத்து 1876
லீயுவார்டென், நெதர்லாந்து
இறப்பு15 அக்டோபர் 1917(1917-10-15) (அகவை 41)
வின்சென்னெசு, பாரிஸ், பிரான்சு
இறப்பிற்கான
காரணம்
துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை
தேசியம்டச்சு
அறியப்படுவதுமுதலாம் உலகப் போரில் செருமனி-சார்ந்த உளவுக் குற்றத்திற்காக பிரான்சிய இராணுவ நீதிமன்றில் குற்றவாளியாகக் காணப்பட்டவர்.
உயரம்5 அடி 10 அங்
பெற்றோர்ஆதாம் செல்,
ஆன்ட்சி வான் டெர் மியூலென்
வாழ்க்கைத்
துணை
ருடோல்ஃப் ஜான் மாக்லியோட் (1895 – 1906) (மணமுறிவு)
பிள்ளைகள்2

மாட்ட ஹரி (Mata Hari, இயற்பெயர்: மார்கரெத்தா கெர்த்துரூதா செல்லே, ஆகத்து 7, 1876 – அக்டோபர் 15, 1917), டச்சு நடன மாது. இவர் முதலாம் உலகப் போரில் செருமனியருக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, பிரான்சிய இராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு பாரிசுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.[1] இவரது கதை பல புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் பிற படைப்புகளுக்கு உத்வேகமாக செயல்பட்டது.

பிரெஞ்சு இராணுவத்திற்கு ஒரு பலிக்கடா தேவைப்பட்டதால் இவர் தண்டிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது,[2][3] மேலும் இவரது தண்டனையைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்ட கோப்புகளில் பல தவறான தகவல்கள் இருந்தன.[4] மாட்ட ஹரி ஒரு உளவாளியாக இருந்திருக்க முடியாது என்றும் குற்றமற்றவர் என்றும் சிலர் கூறியுள்ளனர்.[5]

பிறப்பும் இளமை பருவமும்

[தொகு]

மார்கரெத்தா நெதர்லாந்தில் லீயுவார்டன் என்ற நகரில் ஆடம் செல்லே (1840–1910) என்ற தொப்பி வணிகருக்கும் ஆன்சி மியூலென் என்பவருக்கும் பிறந்த நால்வரில் மூத்தவராக 1876 ஆகத்து 7 இல் பிறந்தார்.[6] இவரைக் குடும்பத்தினர் மக்ரீட் என அழைப்பார்கள்.[7] மாட்ட ஹரி யூதர்,[7] மலேசியர்,[8] அல்லது ஜாவானியர், அதாவது இந்தோனேசிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று கருதப்பட்ட போதிலும், அவர் யூத அல்லது ஆசிய வம்சாவளி இல்லை என்றும், அவரது பெற்றோர் இருவரும் டச்சுக்காரர்கள் என்றும் அறிஞர்கள் முடிவு செய்தனர்.[9] இவரது தந்தை ஒரு தொப்பிக் கடை வைத்திருந்தார், எண்ணெய் தொழிலில் முதலீடு செய்தார், மார்கரேத்தாவும் அவரது உடன்பிறப்புகளும் 13 வயது வரை பிரத்தியேகமான பள்ளிகளில் படிப்பித்து,[10] ஆடம்பரமான குழந்தைப் பருவத்தைக் கொடுக்கும் அளவுக்கு வசதி படைத்தவராகத் தந்தை இருந்தார்.[11]

1889 இல் மார்கரேதாவின் தந்தை திவாலான பிறகு, பெற்றோர் மணமுறிவு செய்தனர், மார்கரெத்தா 15 வயதிருக்கும் போது தாயார் 1891 இல் இறந்தார்.[10][11] தந்தை ஆம்ஸ்டர்டாமில் 1893 இல் மறுமணம் செய்து கொண்டார். இதனால் குடும்பம் பிரிந்தது, மார்கரேதா சினீக் நகரில் அவரது தொட்டப்பர் வைசர் உடன் வாழ அனுப்பப்பட்டார். மார்கரெத்தா லைடனில் மழலையர் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றினார். ஆனால் தலைமை ஆசிரியர் அவளுடன் வெளிப்படையாக ஊர்சுற்றத் தொடங்கியபோது, அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.[10][11][12] சில மாதங்களுக்குப் பிறகு, அவள் ஹேக்கில் உள்ள தன் மாமாவின் வீட்டிற்கு சென்றார்.[12]

திருமண வாழ்கையும் மணமுறிவும்

[தொகு]

இவர் 18 வயதில் மெக்லியோட் என்ற , ஸ்காட்லாந்தை சேர்ந்த ,டச்சு படைதலைவரை 1895 ஜூலை 11 இல் மணம் புரிந்தார் .திருமணத்திற்கு பின் அழகிய வீட்டில் வசித்தார்.இந்நிலையில்ஜாவா தீவுக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் . கணவருடன் சென்றார் ஒன்பது வருட தாம்பத்தியத்தில் கணவர் குடிகாரன் ஆகி விட , பிற ஆடவர்களுடன் கூடி மகிழ்ந்தார் .இவர்களுக்கு ஒரு பையனும் ,பெண்ணும் பிறந்தனர், 1899 இல் பையன் மூன்று வயதில் விஷமிட்டு கொல்லப்பட்டான் . 1900 களில் மகளை தன் பொறுப்பில் தூக்கி கொண்டு கணவன் ஓடிவிட்டான் இவ்வாறாக தாம்பத்தியம் முடிவுக்கு வந்தது .ஆனால் மணவிலக்கு பெற்றுக்கொண்டு ஜாவாவிலிருந்து ஹாலந்து திரும்பினார் . 1903 ஆம் ஆண்டு பாரிஸ் வந்தடைந்தார் .அங்கே நடனம் ,மற்றும் வடிவழகு வேலை செய்தார் . சுமார் 9 வருடங்களில் அவருடைய புகழ் பாரிஸ்,பெர்லின் ,வியன்னா ,ரோம் ,லண்டன் முழுவதும் பரவியி ருந்தது . செக்ஸ் மற்றும் நிர்வாண நடனமே இப் புகழுக்கு காரணம் .

புனைகதை

[தொகு]

தான் இந்தியாவில் மலபாரில் பிறந்ததாகவும் ,தாயார் ஒரு நடனக்காரி- தாசி என்றும் ,தன்னை பெற்று விட்டு பிரசவத்தில் இறந்து போய் விட்டதாய் கதை கட்டினார். மேலும் தான் சிவன் கோவிலில் வளர்ந்ததாக புளுகினார் .தன் பெயர் மட ஹரி என்றும் , இதன் பொருள் தாயை கொன்றவர் என்றும் கதை கட்டினார் .

பாரிசில் ஆடம்பர வாழ்கை

[தொகு]

1905 இல் ஓரியண்டல் நடனங்கள் புளித்து போயின .அப்போது மட ஹரி செக்ஸ் நடனங்களை ,இந்திய கலாச்சாரம் மற்றும் இந்து மத சாயலில் விரசமான நடனத்தை ஆடி பார்வையாளர்களை கவர்ந்தார் .மட ஹரி மேடையில் வெள்ளை குதிரையில் 90 சதவீத நிர்வாணத்தில் தோன்றுவார். மூடப்படாத பின்புறமும் , பிரா அணியாத நட்டு போன்ற ஆபரணத்தை மார்பிலும் , கால்களின் இடைப்பகுதி துருத்தி இருக்குமாறு தோன்றுவார். என்றாலும் இந்த கவர்ச்சி சில வருடங்களில் ,இளம் பெண்கள் வருகையால் தடையுற்றது .அதன் பின்னரே உளவாளி ஆகி நிறைய சம்பாதிக்கும் ஆசை வந்தது .

பிரான்ஸ் உளவாளி

[தொகு]

1916 வயது 40 இல் 21 வயது ருஷ்ய படை அதிகாரி விளாமித்தீர் டே மஸ்லோவை காதலித்தார் .அவர் படையின் முன்னணியில் போரிடுகையில் ஒரு கண்ணை இழந்தார் .எனவே ஏற்கனவே பழக்கமான ஜார்ஜ் லடோக்ஸ் மூலமாக நடன வேலையோடு உளவு வேலையையும் செய்ய பிரான்ஸ் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டாள். மட ஹரி ஜெர்மன் படை தலைவர்களை வளைத்து அவர்களிடம் இருந்து தகவல்களை பிரான்சிற்கு தெரியப்படுத்த நியமிக்கப்பட்டார் .மாறாக பிரெஞ்சு ரகசியங்களை ஜெர்மனிக்கு கசியவிட்டது தெரிய வந்தது . ஆனால் உண்மையில் இவர் ஜெர்மனிக்கு தான் விசுவாசமாக இருந்து பிரான்சுக்கு தவறான தகவல் கொடுத்தார்.

விசாரணையும் தீர்ப்பும்

[தொகு]

செயின்ட் லசர் ஜெயிலில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர் .படைத்தலைவர் பியரி போச்சார் டான் விசாரித்தார் .இவர் பாரிஸ் வாழ்கை நன்கு அலசப்பட்டது .இறுதியாக ஜெர்மனியில் இருந்து 20000 மார்க் பெற்றதை ஒப்புக்கொண்டாலும் ,அவை களவு போன பொருளுக்கு கிடைத்த நஷ்ட ஈடு என்றும் , தான் உளவாளி அல்ல ,வெறும் டான்சர் தான் என்று கூறியதை எவரும் ஒப்புக்கொள்ளவில்லை . மட ஹரி பெற்ற பணம் அனைத்தும் ஜெர்மன் எம்பசியால் தரப்பட்டவை என்றும் ,செக்ஸ் சேவைக்கு தரப்பட்டதாகவோ இதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அரசாங்க தரப்பு வாதிட்டது . இவ்வாறு 45 நிமிடத்துக்குள் விசாரணை முடிவுற்றது . என்றாலும் இந்த குற்றத்தை இறுதி வரை ஒப்புக்கொள்ள மறுத்து விட்டார்

இறப்பு

[தொகு]

1917 அக்டோபர் 15 .மட ஹரி நீலநிற கோட் , மற்றும் மும்முனை தொப்பி அணிந்திருந்தார் .மரண இடத்திற்கு ஒரு மந்திரியும் இரண்டு கன்னியாஸ்திரிகளுடன் வந்திருந்தார் .இவர்கள் மரண ஜெபம் ஜெபித்து முடித்தவுடன் மரண இடத்திற்கு சென்றார் . அவர் ஒரு எல்லைகல்லில் இறுக கட்டப்பட்டார். அவர்பி ன்னர் சுட்டுக்கொள்பவர்க்கு நன்றி சொல்லும் விதமாக பறக்கும் முத்தத்தை விடுத்தார் .இருவர் அவரை சுட்டனர் .அவர் தலை தொங்கியது.

நியூயார்க் டைம்ஸ் இவரைப்பற்றிய செய்தியை நான்கு பத்திகளில் வெளியிட்டது . இவருடைய கதை ஆர்வமாய் எல்லோராலும் விவாதிக்கப்பட்டது .மேலும் 1931 இல் மட ஹரி என்ற திரைப்படத்தில்கிரேடோ கார்போ கதாநாயகியாக நடித்தார்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mata Hari". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். https://www.britannica.com/EBchecked/topic/368879. பார்த்த நாள்: 21-08-2007. 
  2. "Why Mata Hari Wasn't a Cunning Spy After All". National Geographic. 12 November 2017. Archived from the original on 9 November 2019.
  3. Howe, Russel Warren (1986). Mata Hari: The True Story. New York: Dodd, Mead and Company. pp. x–xi, 285.
  4. Jeffries, Stuart (16 October 2001). "Did they get Mata Hari wrong?". The Guardian. https://www.theguardian.com/world/2001/oct/16/humanities.highereducation. 
  5. Goldsmith, Belinda (7 August 2007). "Mata Hari was a scapegoat, not a spy – biographer". Reuters. https://in.reuters.com/article/idINIndia-28863720070807. 
  6. "Family Trees - Margaretha Gertruida Zelle". Praamsma.org. Archived from the original on 13 July 2017.
  7. 7.0 7.1 Kerr, Gordon (2011). Treacherous Women: Sex, temptation and betrayal. Canary Press eBooks. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1908698193.
  8. Parish, James Robert (1992). Prostitution in Hollywood Films: Plots, Critiques, Casts, and Credits for 389 Theatrical and Made-for-television Releases. McFarland & Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0899506777.
  9. Cohen, M (2010). Performing Otherness: Java and Bali on International Stages, 1905–1952. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0230309005. பார்க்கப்பட்ட நாள் 15 October 2017 – via Google Books.
  10. 10.0 10.1 10.2 Rosenberg, Jennifer. "Biography of Mata Hari, Infamous World War I Spy". ThoughtCo. பார்க்கப்பட்ட நாள் 2024-02-03.
  11. 11.0 11.1 11.2 "Mata Hari". World of Biography. Archived from the original on 15 September 2010. பார்க்கப்பட்ட நாள் 5 July 2010.
  12. 12.0 12.1 Noe, Denise. "Mata Hari — The Story of Mata Hari: Introduction — Crime Library". Archived from the original on 9 February 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாட்ட_ஹரி&oldid=3915223" இலிருந்து மீள்விக்கப்பட்டது