Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோன் ஹவார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோன் வின்ஸ்டன் ஹவார்ட்
John Winston Howard
25வது ஆஸ்திரேலியப் பிரதமர்
தேர்தல்கள்: 1996, 1998, 2001, 2004
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச் 11, 1996
Deputyடிம் ஃபிஷர், ஜோன் அன்டர்சன், மார்க் வெயில்
முன்னையவர்போல் கீட்டிங்
பின்னவர்கெவின் றட்
ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்
பெனெலோங்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 18, 1974
முன்னையவர்ஜோன் கிறாமர்
பெரும்பான்மை41,735 (54.33%)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 சூலை 1939 (1939-07-26) (அகவை 85)
சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா
தேசியம்ஆஸ்திரேலியர்
அரசியல் கட்சிஆஸ்திரேலிய லிபரல் கட்சி
துணைவர்ஜனெட் ஹவார்ட்
முன்னாள் கல்லூரிசிட்னிப் பல்கலைக்கழகம்
தொழில்சட்டத்தரணி

ஜோன் வின்ஸ்டன் ஹவார்ட் (John Winston Howard, பிறப்பு: ஜூலை 26, 1939) ஆஸ்திரேலியாவின் அரசியல் தலைவரும் அதன் 25வது பிரதமரும் ஆவார். சேர் ரொபேர்ட் மென்சீசுக்கு அடுத்தபடியாக இவரே ஆஸ்திரேலியாவின் நீண்ட காலம் பிரதமராக இருக்கும் தலைவராவார். இவரே ஆஸ்திரேலிய லிபரல் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.

ஹவார்ட் மால்கம் ஃபிரேசரின் அரசில் 1977-1983 காலப்பகுதியில் பொருளாளராக இருந்தவர். 1985-1989 காலப்பகுதியில் லிபரல் கட்சியின் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் (ஆஸ்திரேலிய தேசியக் கட்சியுடன் கூட்டணி) இருந்தார். 1995 இல் இவர் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவரானார்.

13 ஆண்டு காலம் எதிர்க்கட்சியில் இருந்த லிபரல் கூட்டணி இவரது தலைமையின் கீழ் 1996 இல் நடந்த தேர்தல்களில் பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஹவார்ட் மார்ச் 11, 1996 இல் நாட்டின் 25வது பிரதமரானார். ஹவார்டின் அரசு 1998, 2001, 2004 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றது. ஐந்தாவது தடவையும் பிரதமராக இருக்க அவர் எடுத்த் முயற்சிகாள் வெற்றி பெறவில்லை. நவம்பர் 24, 2007 இல் நடந்த தேர்தலில் அவர் கெவின் றட் தலைமையிலான ஆஸ்திரேலியத் தொழிற் கட்சியிடம் படு தோல்வியைச் சந்தித்தார்.

விருதுகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_ஹவார்ட்&oldid=3624054" இலிருந்து மீள்விக்கப்பட்டது