Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெரோம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித ஜெரோம்
புனித எரோணிமுசு
புனித எரோணிமுசு விவிலியத்தை மொழி பெயர்ப்பதை தேவதூதர்கள் பார்வையிடல்
ஓவியர்: Bartolomeo Cavarozzi
மறைவல்லுநர், குரு, துறவி
பிறப்புசுமார் கி.பி. 347
சிரிதோன்
இறப்பு420
பெத்லகேம்
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை
கிழக்கு மரபுவழி திருச்சபை
ஆங்கிலிக்க ஒன்றியம்
லூதரனியம்
முக்கிய திருத்தலங்கள்புனித மரியா பேராலயம், உரோமை நகரம், இத்தாலி
திருவிழா30 செப்டம்பர் (கிழக்கு கிறித்தவம்)
15 ஜூன் (மேற்கு கிறித்தவம்)
சித்தரிக்கப்படும் வகைசிங்கம், கர்தினால், சிலுவை, மனித மண்டையோடு, ஊதுகொம்பு, ஆந்தை, நூல் மற்றும் எழுது பொருட்கள்
பாதுகாவல்தொல்பொருளியல்; ஆவணக் காப்பாளர்கள்; விவிலிய அறிஞர்கள்; நூலகர்; நூலகம்; பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகள்; மாணவர்; மொழிபெயர்ப்பாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்வுல்காத்தா - இலத்தீன் விவிலிய மொழிபெயர்ப்பு

புனித எரோணிமுசு (சுமார். 347 – 30 செப்டம்பர் 420; (புனித ஜெரோம்) (இலத்தீன்: Eusebius Sophronius Hieronymus; பண்டைக் கிரேக்கம்Εὐσέβιος Σωφρόνιος Ἱερώνυμος) என்பவர் உரோமைப் பேரரசில் வாழ்ந்த கிறித்தவ குருவும், இறையியல்லாளரும், வரலாற்றாசிரியரும் ஆவார். இவர் திருச்சபையின் மறைவல்லுநர்களுல் ஒருவர். இவரின் தந்தை யுசிபஸ்.

யுகோஸ்லாவியாவைச் சேர்ந்த டால்மேஷியாவில் நான்காம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்த இவர், ரோமையில் படித்து பின்னர் இன்னும் அதிகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பல நாடுகளுக்குச் சென்றார். லத்தின், கிரேக்கம், எபிரேயம் ஆகிய மொழிகளில் புலமை அடைந்த இவர், தனது 39 வது வயதில் குருப்பட்டம் பெற்றார். பல ஆண்டுகள் பல்வேறு இடங்களில் பணி புரிந்து, இறுதியாக பாலஸ்தீனம் அடைந்தார். அங்கு 5 ஆண்டுகள் பாலைவனத்தில் வாழ்ந்தார். இவர் இலத்தீனில் விவிலியத்தை மொழிபெயர்த்ததற்காக பெரிதும் அறியப்படுகின்றார். விவிலியத்தை எபிரேயம், அரமேயிக் ஆகிய மொழிகளிலிருந்து நேரடியாக இலத்தீனுக்கு மொழி பெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்பு வுல்காத்தா (அதாவது, சாதாரணமாக பயன்படுத்துவது) என்று அறியப்படுகின்றது.[1] இந்த மொழிபெயர்ப்பை ட்ரென்ட் பொதுச்சங்கம் கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரப்பூர்வமான மொழிபெயர்ப்பு என அறிவித்தது.

இவர் பெத்லகேமுக்கு அருகில் 30 செப்டம்பர் 420இல் இறந்தார் என்பர். இவர் முதலில் பெத்லகேமில் அடக்கம் செய்யப்பட்டாலும் பின்னர் இவரின் திருப்பண்டங்கள், உரோமையில் உள்ள புனித மரியா பேராலயத்துக்கு எடுத்து வரப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.

இவர் கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளில் புனிதராக மதிக்கப்படுகின்றார். இவர் நூல்நிலைய கண்காணிப்பாளர்களின் பாதுகாவலர் எனக் கருதப்படுகிறார்.

குறிப்புகள்

[தொகு]
  1. Schaff, Philip, ed. (1893). A Select Library of Nicene and Post-Nicene Fathers of the Christian Church. 2nd series. Vol. VI. Henry Wace. New York: The Christian Literature Company. பார்க்கப்பட்ட நாள் 2010-06-07. {{cite book}}: Invalid |ref=harv (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெரோம்&oldid=3396762" இலிருந்து மீள்விக்கப்பட்டது