Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

ஐரோப்பியக் காட்டெருமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Sarcopterygii
ஐரோப்பியக் காட்டெருமை
ஐரோப்பிய காட்டெருமை
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
இனக்குழு:
பேரினம்:
இனம்:
B. bonasus
இருசொற் பெயரீடு
Bison bonasus
(Carl Linnaeus, 10th edition of Systema Naturae)
Subspecies
  • Bison bonasus bonasus (Linnaeus, 1758)
  • Bison bonasus hungarorum
  • Bison bonasus caucasicus

ஐரோப்பியக் காட்டெருமை அல்லது வைசன் அல்லது ஐரோப்பிய வன (wood) காட்டெருமை என்று அழைக்கப்படுகிற இது ஐரோப்பிய ஆசிய பேரினத்தைச் சார்ந்ததாகும். இன்றும் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இரண்டு வகை காட்டெருமைகளில் இதுவும் ஒன்றாகும். மற்றொன்று அமெரிக்காவின் காட்டெருமை ஆகும். கொஞ்ச நாட்கள் முன்பு வரை மூன்று வகை சிற்றினங்கள் இருந்தன தற்போது அவைகளில் இரண்டு இனங்கள் அழிந்து விட்டது. ஒன்று மட்டுமே தொடர்ந்து வாழ்ந்து வருகிறது. இந்த பேரினமானது அழிந்து போன ஒரு வகை காட்டு ஆட்டிலிருந்து தோன்றிய தற்போதைய நவீன் மாட்டினம் மற்றும் ஸ்டெப்பி புல்வெளியின் ஆண் காட்டெருமையின் கலப்பின வகையிலிருந்து தோன்றியதாகும். அந்த கலப்பினமானது கிக்ஸ் காட்டெருமையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதற்கு மாற்றாக ப்ளேய்ஸ்டோசின் மரநில காட்டெருமை சிற்றினங்களின் மூதாதையராகக் கருதப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் காடுகளில் இவை அழிந்து போகும் வரை வேட்டையாடப்பட்டது, ப்யாலோவெய்ஸா காட்டில் பி.பி(B.b) போனாஸிஸ் என்ற சிற்றினத்தின் கடைசி விலங்கு சுட்டுக் கொல்லப்பட்டது. 1927 இல் வடகிழக்கு காகஸஸில் பி.பி(B.b) காகஸஸி சிற்றினமும் மத்திய 1800களில் பி.பி(B.b) ஹஙகாரொரம் என்ற சிற்றினமும் வேட்டையாடிக் கொல்லப்பட்டது. ப்யாலோவெய்ஸா அல்லது கீழ்நில ஐரோப்பிய காட்டெருமையானது சரணாலயத்தில் உயிரோடு பாதுகாக்கப்பட்டு மறுபடியுமாக ஐரோப்பிய நாடுகளுக்குள்ளாக அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அவைகளில் காடுகளில் சஞ்சரித்து வனவிலங்காகவே வாழுகிறது. தற்போது அவைகளுக்கு மனிதர்களைத் தவிர வேறு சில எதிரிகள் மட்டுமே உள்ளனர். இந்த காட்டெருமையைக் குறித்து முதன் முதலில் கார்ல் லின்னேயஸ்தான் 1758 இல் அறிவியல் விளக்கம் கொடுத்தார். பின்னாளில் கொடுக்கப்பட்ட விளக்கங்களின் படி இதுவும் அமெரிக்காவின் காட்டெருமையும் ஒன்றாகக் கருதப்பட்டது. இதை அழிந்துபோன சில கால்நடைகளின் மூதாதையான காட்டு ஆடுகளோடு ஒப்பிட்டு குழப்பக்கூடாது.

1996 இல் சர்வதேச இயற்கை பாதுகாப்பு குழு இந்த ஐரோப்பிய காட்டெருமையை அழியக் கூடிய நிலையில் உள்ள விலங்கினமாக பட்டியலிட்டது. அதன் பிறகு இதன் வாழும் நிலை எளிதில் பாதிக்கக் கூடிய நிலையை அடைந்தது. பல்லாண்டுகளுக்கு முன்பு விசேஷமாக இடைப்பட்ட காலங்களில் இவை இவைகளின் தோல் மற்றும் கொம்புகளுக்காகப் பயன்பட்டது. கொம்புகள் பானங்கள் நீர் அருந்தும் கருவியாகப் பயன்பட்டது.

காட்டெருமையைக் குறித்த விளக்கவுரை

[தொகு]
செருமனியில் ஐரோப்பியக் காட்டெருமை

இந்தக் காட்டெருமை இனம் ஐரோப்பாவில் வாழும் விலங்கினங்களில் மிகவும் கனமான விலங்காகும். ஐரோப்பியக் காட்டெருமை அதன் 80 முதல் 90 செ.மீ. நீளமுள்ள வால் தவிர 2.1 மீட்டரிலிருந்து 3.1 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது, 1.6 இலிருந்து 1.9 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் குட்டிகள் பிறப்பில் மிகவும் குறைந்த அளவு எடை கொண்டதாகக் காணப் படும். 15கி.கிமிலிருந்து 35கி.கிராம் வரை எடை கொண்டதாகக் காணப்படும். பொலாரஸ் மற்றும் போலந்து நாருவைகளுக்கு இடையில் காணப்படும் ப்யாலோவெய்ஸா காட்டில் காணப்படும் காட்டெருமைகளின் சராசரி எடை 634 கி.கிராம் ஆகும். இவைகள் 400 கி.கிலிருந்து 900 கி.கிராம் வரை எடை கொண்ட எருமைகள் உண்டு. பெண் எருமைகளைன் சராசரி எடை 424 கி.கிராம் ஆகும். 300லிருந்து 540 கி.கிராம் வரை எடை கொண்ட பெண் எருமைகள் உண்டு. மிக அரிதாக 1000 கி.கி அதற்கு சற்றும் கூடுதலாகக் கூட வளரும் காட்டெருமைகள் உண்டு.

சராசரியாக இவைகள் அமெரிக்க காட்டெருமைகளைக் காட்டிலும் சற்றும் இலேசாகவும் தோள் அளவில் சற்று உயரமாகவும் காணப்படும். அமெரிக்க காட்டெருமைகளோடு ஒப்பிட்டு பார்க்கும் போது இவைகள் கழுத்து, தலை மற்றும் முன் நெற்றிகளில் குட்டை முடி கொண்டவையாகும். ஆனால் இவைகளின் வாலும் கொம்பும் அமெரிக்க காட்டெருமையை விட நீளமானவை ஆகும்

பெயரிலக்கணக்கம்

[தொகு]

வைஸன்ட் என்று சொல்லக்கூடிய நவீன ஆங்கில வார்த்தையானது நவீன ஜெர்மானிய மொழியில் உள்ள வைஸன்ட் என்கிற வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும். (இந்த வார்த்தை பழைய ஜெர்மானிய வார்த்தையான வைஸென்ட் மற்றும் வைசான்ட் அதேப் போல பழைய ஆங்கில வார்த்தை விசென்ட் போன்ற வார்த்தைகளில் இருந்து பெறப்பட்டதாகும்).

ஆன்கில வார்த்தையான bison என்பது 1611களில் இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது ஆகும். இவற்றின் அடிப்படை வார்த்தை ஜெர்மானிய மொழியில் உள்ள வைஸ் (wise - originated from weasel) மற்றும் வீஸலிலிருந்து பெறப்பட்டதாகும். இதன் அர்த்தம் மிருகங்களின் வாசனை என்பதாகும்.

வரலாறு

[தொகு]
அல்தாமிரா குகையின் அருகே ஐரோப்பிய காட்டெருமை

வரலாற்றுப் பூர்வமாக தாழ்நில ஐரோப்பிய காட்டெருமைகளின் வாழிடமானது வட ஐரோப்பாவின் தாழ்நிலங்களான மத்திய மாஸிஃபிலிருந்து வோல்கா ஆறு மற்றும் காகஸ் வரை நீண்டுள்ளது. ஒருவேளை முன்பு இவைகள் தற்போதைய இரஷ்ய கூட்டமைப்பின் ஆசிய பாகத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவைகள் ஒருகாலத்தில் தெற்கு சுவீடனிலும் டென்மார்க்கிலும் இருந்ததாக பதிவாகியுள்ளது. ஆனால் பிரித்தானிய தீவுகளிலோ அல்லது இத்தாலியிலொ அல்லது ஐபீரிய தீபகற்பத்திலோ இருந்ததாகப் பதிவுகள் இல்லை. இவைகளின் மூதாதையராகிய அழிந்து போன இனமாகிய பி.பிரிஸ்கஸ் பைஸன் (B.priscus ) கி.மு. 7000 வருடங்களுக்கு முன்பாக வட அமெரிக்கா மற்றும் யூரேஸியாவில் காணப்பட்டது.

தற்போது இல்லாத வகை, 1889-இல்
கன்றுகளுடன்
ஐரோப்பிய காட்டெருமைக் கூடு

உசாத்துணை

[தொகு]
  1. Olech, W.; IUCN SSC Bison Specialist Group (2008). "Bison bonasus". The IUCN Red List of Threatened Species (IUCN) 2008: e.T2814A9484719. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T2814A9484719.en. http://www.iucnredlist.org/details/2814/0. பார்த்த நாள்: 11 January 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐரோப்பியக்_காட்டெருமை&oldid=3924758" இலிருந்து மீள்விக்கப்பட்டது