Nothing Special   »   [go: up one dir, main page]

உத்தராகண்டம்

இந்திய மாநிலம்
(உத்தராகண்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உத்தராகண்டம் [8] (Uttarakhand, இந்தி: उत्तराखण्ड) இந்தியாவின் வட பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும். இம்மாநிலம் 9 நவம்பர் 2000-இல் உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு இந்தியக் குடியரசின் 27 ஆவது மாநிலமாக உருவானது [9]. 2000 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரைக்கும் உத்தராஞ்சல் [10] என அழைக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் ஏராளமான இந்து கோயில்களும் புனிதத்தலங்களும் காணப்படுவதால் பெரும்பாலும் மக்கள் இம்மாநிலத்தை தேவபூமி என்றும் கடவுள்களின் நிலம் என்றும் கருதுகிறார்கள் [11]. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு முழுவதும் இமயமலையில் அமைந்துள்ளது.

உத்தராகண்டம்
உத்தராஞ்சல்
மேலிருந்து கடிகார திசையில்: அவுலியில் இருந்து கர்வால் இமயமலை, பத்ரிநாத்தில் உள்ள பத்ரிநாத் கோவில், கேதார்நாத்தில் கேதார்நாத் கோவில், நைனிடாலில் உள்ள ராஜ் பவன், ருத்ரபிரயாக்கில் அலக்நந்தா மற்றும் மந்தாகினி நதிகள் சங்கமிக்கும் இடம், இரு இந்தியர்களின் நட்பு சண்டை ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் யானைகள் மற்றும் ஹரித்வாரில் உள்ள ஹர் கி பவுரியில் மாலை ஆரத்தி.

சின்னம்
பண்: உத்தரகண்ட் தேவபூமி மத்ரிபூமி (உத்தரகண்ட், கடவுளின் நிலம், தாய்நாட்டே!)
உத்தராகண்டம் வரைபடம்
உத்தராகண்டம் வரைபடம்
நாடு இந்தியா
பகுதிவட இந்தியா
நிறுவப்பட்ட நாள்9 நவம்பர் 2000 (உத்தரகண்ட் நாள்)
தலைநகரம்பரரிசைன் (கோடை) தேராதூன் (குளிர்காலம்)
மாவட்டங்கள்
அரசு
 • நிர்வாகம்உத்தராகண்டு அரசு
 • ஆளுநர்குர்மீட் சிங்
 • முதலமைச்சர்புஷ்கர் சிங் தாமி
 • சட்டப் பேரவைஉத்தராகண்டச் சட்டமன்றம்
ஓரவை (70 உறுப்பினர்கள்)
 • நாடாளுமன்ற தொகுதிகள்
 •  உயர் நீதிமன்றம்உத்தராகண்டு உயர் நீதிமன்றம்
பரப்பளவு
 • மொத்தம்53,483 km2 (20,650 sq mi)
 • பரப்பளவு தரவரிசை19வது
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,00,86,292
 • தரவரிசை27வது
 • அடர்த்தி190/km2 (490/sq mi)
GDP (nominal) (2019–20)
 • மொத்தம்2.93 டிரில்லியன் (US$37 பில்லியன்) [2]
 • தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி2,20,275 (US$2,800)
மொழி
 • அலுவல்மொழிஇந்தி[3]
 • கூடுதல் அலுவல்மொழிசமசுகிருதம்[4][4]
 • பூர்வீகம்கர்வாலி, குமாவோனி மற்றும் ஜான்சாரி
நேர வலயம்ஒசநே+05:30 (இசீநே)
தொலைபேசி+91
ஐஎசுஓ 3166 குறியீடுIN-UT
வாகனப் பதிவுUK
மனித மேம்பாட்டுச் சுட்டெண்(2018)Increase 0.684[5][6]
medium (18வது)
படிப்பறிவு (2011)87.60%[7] (17வது)
பாலின விகிதம் (2011)963 /1000 [7] (14வது)
இணையதளம்uk.gov.in

வடக்கில் சீனாவின் திபெத்தும். கிழக்கில் நேபாளமும், தெற்கில் உத்தரப்பிரதேச மாநிலமும், மேற்கிலும் வடமேற்கிலும் இமயமலையும் இம்மாநிலத்திற்கு எல்லைகளாக உள்ளன. கார்வால் கோட்டம். குமாவுன் கோட்டம் என்ற இரண்டு கோட்டங்களாக உத்தராகண்டம் பிரிக்கப்பட்டுள்ளது. இக்கோட்டங்களில் மொத்தம் 14 மாவட்டங்கள் உள்ளன. தேராதூன் உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகராகும். எனினும், இம்மாநிலத்தின் உயர்நீதிமன்றம் நைனிடால் நகரில் உள்ளது.

வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்தே இப்பகுதியில் மனிதர்கள் இருந்துள்ளார்கள் என்பதற்கான தொல்பொருள் சான்றுகள் உள்ளன. பண்டைய இந்தியாவின் வேத யுகத்தில் இப்பகுதி உத்தரகுரு இராச்சியத்தின் ஒரு பகுதியாக உருவாகியிருந்த்து. குமாவோன் பேரரசின் முதல் பெரிய வம்சங்களில் கிமு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குனிந்தர்கள் இருந்தனர். அவர்கள் சைவ மதத்தின் ஆரம்ப வடிவத்தை கடைப்பிடித்தனர். கல்சியில் உள்ள அசோகரின் கட்டளைகள் இந்த பிராந்தியத்தில் புத்தமதத்தின் ஆரம்பகால இருப்பைக் காட்டுகின்றன. இடைக்காலத்தில் குமாவோன் இராச்சியம் மற்றும் கார்வால் இராச்சியத்தின் கீழ் இப்பகுதி ஒருங்கிணைக்கப்பட்டது. 1816 ஆம் ஆண்டில், நவீன உத்தராகண்டின் பெரும்பகுதி சுகாலி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கார்வால் மற்றும் குமாவோனின் முந்தைய மலை இராச்சியங்கள் பாரம்பரிய போட்டியாளர்களாக இருந்தபோதிலும், வெவ்வேறு அண்டை இனக்குழுக்களின் அருகாமையும் அவற்றின் புவியியல், பொருளாதாரம், கலாச்சாரம், மொழி மற்றும் மரபுகளின் பிரிக்கமுடியாத நிரப்பு தன்மை ஆகியன இரு பிராந்தியங்களுக்கிடையில் வலுவான பிணைப்புகளை உருவாக்கியது.1990 களில் மாநிலத்தில் நிகழ்ந்த உத்தரகண்ட இயக்கங்கள் இப்பிணைப்பை மேலும் வலிமையாக்கின. இம்மாநிலத்தின் பூர்வீகவாசிகள் பொதுவாக உத்தரகாண்டி என்று அழைக்கப்படுகிறார்கள், அல்லது இன்னும் குறிப்பாக கார்வாலி அல்லது குமாவோனி என்று அழைக்கப்படுகிறார்கள். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலத்தின் மக்கள் தொகை 10,086,292 ஆகும், இது இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட 20 வது மாநிலமாக திகழ்கிறது [12]. முசோரி, அல்மோரா, ராணிக்கெட், ரூர்க்கி ஆகியவை பிற முக்கிய ஊர்களாகும். இந்து சமயத் திருத்தலங்களான ரிஷிகேஷ், ஹரித்வார், கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகியவையும் உத்தர்காண்ட் மாநிலத்திலேயே அமைந்துள்ளன.

பெயர்க்காரணம்

உத்தராகண்டம் என்ற பெயர் வடக்கு என்ற பொருள் கொண்ட சமசுகிருத சொல்லான உத்தரா (उत्तर) என்பதன் அர்த்தம் 'வடக்கு', மற்றும் நிலம் என்ற பொருள் கொண்ட சமசுகிருத சொல்லான கண்டம் என்பதிலிருந்து ஒட்டுமொத்தமாக 'வடக்கு நிலம் என்று பொருளில் வருவிக்கப்பட்டுள்ளது. .ஆரம்பகால இந்து வேதங்களில் "கேதர்கண்ட்" (இன்றைய கார்வால்) மற்றும் "மனாசுகண்ட்" (இன்றைய குமாவோன்) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்த பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தராகண்டம் என்பது இந்திய இமயமலையின் மைய நீட்சிக்கான பண்டைய புராணச் சொல்லாகும் [13]. இருப்பினும், 1998 ஆம் ஆண்டில் ஒரு புதிய சுற்று மாநில மறுசீரமைப்பைத் தொடங்கியபோது பாரதீய சனதா தலைமையிலான ஒருங்கிணைந்த அரசாங்கமும் உத்தராகண்ட மாநில அரசும் இப்பிரதேசத்திற்கு உத்தராஞ்சல் என்ற பெயரைக் கொடுத்தன. இப்பெயர் மாற்றம் பல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அலுவல்பூர்வமாக உத்தராஞ்சல் என்ற பெயர் புழக்கத்திலிருந்தாலும் மக்கள் மத்தியில் உத்தாகண்டம் என்ற பெயரே பயன்பாட்டில் உலாவியது.

ஆகத்து மாதம் 2006 இல்[14], உத்தராஞ்சல் மாநிலத்தை உத்தராகண்டம் என மறுபெயரிட முன்வைக்கப்பட்ட உத்தராகண்ட மாநில சட்டமன்றத்தின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் உத்தராகண்ட மாநில இயக்கத்தின் முன்னணி உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அமைச்சர்கள் சபை ஒப்புதல் அளித்தது. அதற்கான சட்டம் 2006 ஆம் ஆண்டு அக்டோபரில் உத்தரஞ்சல் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது, மத்திய அமைச்சரவை இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டு வந்தது. இந்த மசோதா பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு 2006 டிசம்பரில் அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களால் கையெழுத்திடப்பட்டது, மேலும் சனவரி 1, 2007 முதல் இந்த மாநிலம் உத்தராகண்டம் என்று அறியப்படுகிறது[15].

ஆட்சிப் பிரிவுகள்

53,483 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உத்தராகண்டம் மாநிலம், 13 மாவட்டங்களாகவும், கார்வால் கோட்டம் மற்றும் குமாவுன் கோட்டம் என இரண்டு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்வால் கோட்டம் ஏழு மாவட்டங்களையும்; குமாவுன் கோட்டம் ஆறு மாவட்டங்களையும் கொண்டுள்ளன. அவைகள்;

  1. அரித்துவார்
  2. உத்தரகாசி
  3. சமோலி
  4. ருத்ரபிரயாக்
  5. டெக்ரி கர்வால்
  6. டேராடூன்
  7. பௌரி கர்வால்
  8. பித்தோரகர்
  9. பாகேஸ்வர்
  10. அல்மோரா
  11. சம்பாவத்
  12. நைனித்தால்
  13. உதம்சிங் நகர்

இந்த மாநிலத்தில் மொத்தமாக 78 வட்டங்களும், 95 மண்டலங்களும், 7541 ஊராட்சிகளும் உள்ளன. இந்த மாநிலத்தில் 16,826 கிராமங்களும், 86 நகரங்களும் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவை ஐந்து நகரங்கள் மட்டுமே. இந்த மாநிலத்தில் 5 மக்களவைத் தொகுதிகளும், 70 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன.[16]

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 10,086,292 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 5,137,773 மற்றும் பெண்கள் 4,948,519 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 963 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 189 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 78.82% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 87.40% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 70.01% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1,355,814 ஆக உள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் பத்தாண்டுகளில் 18.81% ஆக உள்ளது.[17]

சமயம்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாநிலத்தில் இந்து சமயத்தவர் 8,368,636 பேரும், இசுலாமியர் 1,406,825 பேரும், கிறித்தவர் 37,781 பேரும், சீக்கியர் 236,340 பேரும், பௌத்த சமயத்தவர் 14,926 பேரும், சமண சமயத்தவர் 9,183 பேரும், சமயம் குறிப்பிடாதவர்கள் 11,608 பேரும், பிற சமயத்தவர் 993 பேரும் உள்ளனர்.[18]

இந்து ஆன்மீகத் தலங்கள்

நான்கு சிறு கோயில்கள்
   
கேதாரிநாத் பத்ரிநாத்
   
கங்கோத்ரி யமுனோத்திரி

தேசியப் பூங்கா & காட்டுயிர் காப்பகம்

மலை வாழிடங்கள்

2013ஆம் ஆண்டு பெருமழை வெள்ள அழிவுகள்

சூன் மாதம், 2013ஆம் ஆண்டில் இம்மாநிலத்தில் பெய்த தொடர் பெருமழையால் இம்மாநில ஆறுகளில் வரலாறு காணாத அளவில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடியதால், ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களும், ருத்ரபிரயாக், பத்ரிநாத் மற்றும் கேதார்நாத், கங்கோத்திரி மற்றும் யமுனோத்திரி போன்ற புனித இடங்களில் இருந்த பக்தர்களில் பலரும் இறந்தனர். மேலும் கேதார்நாத் கோயில் முக்கிய கோயில் தவிர அதன் சுற்றுபுறக் கட்டிடங்கள் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. நான்கு புனித இடங்கள் என்று சொல்லக்கூடிய பத்ரிநாத் கோயில், கேதார்நாத் கோயில், கங்கோத்திரி மற்றும் யமுனோத்ரி ஆகிய இடங்களுக்கு செல்லும் தரைவழிச் சாலைகள் நிலச்சரிவுகளால் முற்றிலும் சேதமடைந்தன. கேதார்நாத் சிவபெருமான் கோயில் சீரமைக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கு, மே 2014-இல் திறக்கப்பட்டது.[19].[20]

நிவாரணப் பணிகள்

இந்திய அரசின் பேரிடர் மேலாண்மைக் குழு, ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் பேலூர் மடத்தை வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கேட்டுக்கொண்டது. தலைமை மடத்தின் வழிகாட்டுதலுடன் ராமகிருஷ்ண மிஷன் சேவாசிரமம், கங்கல் (ஹரித்வார்) பரந்த நிவாரணப் பணிகளை ஜூன் 21 லிருந்து, ஆகஸ்டு 4 வரை மேற்கொண்டது.[21]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "MOSPI Gross State Domestic Product". Ministry of Statistics and Program Implementation, Government of India. 1 August 2019. பார்க்கப்பட்ட நாள் 16 September 2019.
  2. "GDP per capita of Indian states - StatisticsTimes.com". statisticstimes.com. பார்க்கப்பட்ட நாள் 17 April 2021.
  3. "Report of the Commissioner for linguistic minorities: 50th report (July 2012 to June 2013)" (PDF). Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, Government of India. Archived from the original (PDF) on 8 July 2016. பார்க்கப்பட்ட நாள் 4 December 2016.
  4. 4.0 4.1 "Sanskrit second official language of Uttarakhand". The Hindu. 21 January 2010 இம் மூலத்தில் இருந்து 3 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180303145846/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-otherstates/Sanskrit-second-official-language-of-Uttarakhand/article15965492.ece. 
  5. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 October 2018.
  6. "Human Development Reports". hdr.undp.org. Archived from the original on 18 November 2018. பார்க்கப்பட்ட நாள் 16 February 2019.
  7. 7.0 7.1 "Census 2011 (Final Data) – Demographic details, Literate Population (Total, Rural & Urban)" (PDF). planningcommission.gov.in. Planning Commission, Government of India. p. 4. Archived from the original (PDF) on 27 January 2018. பார்க்கப்பட்ட நாள் 3 October 2018.
  8. "Define Uttarakhand at Dictionary.com". Dictionary.com. Archived from the original on 22 செப்டெம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 27 ஆகத்து 2013.
  9. "About Us". Government of Uttarakhand. Archived from the original on 13 May 2012. பார்க்கப்பட்ட நாள் 17 July 2012.
  10. "Uttarakhand – definition of Uttarakhand in English from the Oxford dictionary". Archived from the original on 12 May 2015. பார்க்கப்பட்ட நாள் 6 May 2015.
  11. Chopra, Jaskiran (21 June 2017). "Devbhumi Uttarakhand: The original land of yoga". The Daily Pioneer இம் மூலத்தில் இருந்து 3 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180303145846/http://www.dailypioneer.com/state-editions/dehradun/devbhumi-uttarakhand-the-original-land-of-yoga.html. பார்த்த நாள்: 3 March 2018. 
  12. "Uttarakhand Population, Sex Ratio, Literacy Rate Uttarakhand". www.census2011.co.in. Archived from the original on 5 May 2017. பார்க்கப்பட்ட நாள் 16 May 2017.
  13. Kandari, O. P., & Gusain, O. P. (Eds.). (2001). Garhwal Himalaya: Nature, Culture & Society. Srinagar, Garhwal: Transmedia.
  14. "Uttaranchal becomes Uttarakhand". UNI. The Tribune (India). 13 அக்டோபர் 2006. Archived from the original on 11 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2013.
  15. Chopra, Jasi Kiran (2 சனவரி 2007). "Uttaranchal is Uttarakhand, BJP cries foul". TNN. The Time of India. Archived from the original on 10 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2013. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  16. "About Uttarkhand - National disaster risk reduction portal by Government of India" (PDF). Archived from the original (PDF) on 2014-06-25. பார்க்கப்பட்ட நாள் 2019-01-30.
  17. http://www.census2011.co.in/census/state/uttarakhand.html
  18. http://www.census2011.co.in/census/state/uttarakhand.html
  19. "கேதார்நாத் சிவன் கோவில் வழிபாட்டிற்கு திறப்பு". http://temple.dinamalar.com/news_detail.php?id=30810. 
  20. உத்தரகண்டில் நிகழ்ந்த இமாலயத் தவறு
  21. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-11-11. பார்க்கப்பட்ட நாள் 2014-08-31.

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தராகண்டம்&oldid=3759069" இலிருந்து மீள்விக்கப்பட்டது