வெண்கழுத்து நாரை
வெண்கழுத்து நாரை | |
---|---|
Mangaon, Raigad, Maharashtra இந்தியா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. episcopus
|
இருசொற் பெயரீடு | |
Ciconia episcopus (Boddaert, 1783) |
வெண்கழுத்து நாரை (White-necked Stork) இப்பறவை நாரை வகையைச் சார்ந்த உலகம் முழுவதிலும் பரவிக் காணப்படும் பறவை ஆகும். இப்பறவை நாரை வகைகளில் பெரிய தோற்றத்தைக்கொண்டு 88 செமீ உயரம் வரை வளருகிறது. இவை பல ஆண்டு காலமாக உயிர் வாழ்ந்த தடயங்கள் கிடைத்துள்ளன. நீண்ட கால் பகுதியும், உருதியான நீண்ட அலகும் கொண்டு, உடல் முழுவதிலும் கருமை நிறமாகவும், கழுத்திற்கு கீழ் பகுதியில் கரும் பச்சை நிறம் கொண்டும் காணப்படுகிறது. ஆனால் தலைக்கு கீழே அமைந்துள்ள கழுத்துப் பகுதி வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. ஆசியப் பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இந்தோனேசியா, போன்ற இடங்களிலும், ஆப்பிரிக்காவிலும் காணப்படுகிறது. ஆனாலும் இப்பறவை இந்தியாவின் தென் பகுதி மாநிலமான தமிழ்நாட்டைச் சார்ந்த பறவையாகும். இப்பறவையின் கூடுகள் நீர் நிலைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள இடங்கள் ஆகும்.
நடத்தை
[தொகு]வெண்கழுத்து நாரையான இவைகள் மற்ற நாரைகளைப் போல் பறக்கும் போது தன் கழுத்தை நீட்டிக் கொண்டு விமானம் போல் பரக்கிறது. தன் சிறகுகளைக் கொண்டு சூடான காற்றைத் தனக்கு சாதமாக்கி ஈர்த்துக் கொண்டு நீண்ட தூரம் பறந்து செல்கிறது. இரண்டு முதல் ஐந்து முட்டைகளை இடுகிறது.
உணவு
[தொகு]இவை மெதுவாக தரையில் நடக்கும் தன்மை கொண்டது. இவை நீர்நில வாழ்வன, ஊர்வன, பூச்சி போன்றவற்றை உட்கொண்டு வாழ்கிறது.
படக்காட்சிகள்
[தொகு]-
இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில்
-
இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Ciconia episcopus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)
மேலும் பார்க்க
[தொகு]- Woolly-necked Stork Ciconia episcopus பரணிடப்பட்டது 2009-01-04 at the வந்தவழி இயந்திரம் - BirdLife International
- Woolly-necked Stork videos and photos பரணிடப்பட்டது 2016-04-13 at the வந்தவழி இயந்திரம் - Internet Bird Collection
- Woollynecked Stork - The Atlas of Southern African Birds