Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

வாமிகா கபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாமிகா கபி
2023 இல் வாமிகா கபி
பிறப்பு29 செப்டம்பர் 1993 (1993-09-29) (அகவை 31)
சண்டிகர், இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2007–தற்போது வரை

வாமிகா கபி ( Wamiqa Gabbi; பிறப்பு செப்டம்பர் 29,1993) ஓர் பாலிவுட் நடிகை ஆவார். இவர் பஞ்சாபி மற்றும் இந்தி படங்களில் தோன்றுகிறார். ஜப் வி மெட் (2007) என்ற இந்தித் திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்துடன் அறிமுகமானார். ஆனால் யோ யோ ஹனி சிங் மற்றும் அமரீந்தர் கில் ஆகியோருடன் சேர்ந்து நடித்திருந்த து மேரா 22 மெயின் தேரா 22 (2013) என்ற படத்தில் இவருக்கு ஒரு பெரிய வெற்றி கிடைத்தது. பின்னர் இஷ்க் பிராண்டி (2014), நிக்கா ஜைல்டார் 2 (2017), பரஹுனா (2018), தில் தியான் கல்லன் (2019), நிக்கோ ஜைல்டார் 3 (2019) போன்ற பல பஞ்சாபி படங்களில் நடித்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

வாமிகா, 29 செப்டம்பர் 1993 அன்று சண்டிகரில் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார்.[1][2][3] இவரது தந்தை கோவர்தன் கபி இந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் எழுதும் ஒரு எழுத்தாளர். மேலும், அவர் கபி என்றா புனைப்பெயராகப் பயன்படுத்துகிறார்.[4][5]

தொழில்

[தொகு]

வாமிகா, ஒரு பயிற்சி பெற்ற கதக் நடனக் கலைஞர். து மேரா 22 மை தேரா 22 உடன் பஞ்சாபி திரைப்படம் மூலம் அவரது பெரிய வெற்றி கிடைத்தது. நடிகர் தில்ஜித் தோசாஞ்ச் உடன் இணை நடிகராக இஷ்க் பிராண்டி மற்றும் இஷ்க் ஹாசிர் ஹை ஆகிய இரண்டு பஞ்சாபி படங்களில் நடித்தார்.

சிக்ஸ்டீன் படத்தில் தனிஷாவாக தனது முதல் பெண் கதாநாயகியாக நடித்தார். இவர் தெலுங்கில் பலே மஞ்சி ரோஜு திரைப்படத்தில் முன்னணி நடிகையாக நடித்திருந்தார்.

கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கிய 2016 இல் வெளியான மாலை நேரத்து மயக்கம் (2016) என்ற தமிழ் திரைப்படத்தில் வாமிகா கதாநாயகியாக நடித்தார்.[6] மலையாளத்தில் டோவினோ தாமசுடன் கோதா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.[7] மார்ச் 2017 இல், வாமிகா அஷ்வின் சரவணன் இயக்கத்தில் சிவாதா மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடித்த புதிய தமிழ் திரைப்படமான இரவாகாலம் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் மம்தா மோகன்தாஸ் ஆகியோரும் நடித்த 9 என்ற படத்தில் வாமிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் .[8] விசால் பரத்வாஜ் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ஃபர்சத் என்ற குறும்படத்தில் இஷான் கட்டருக்கு இணையாக வாமிகா கதாநாயகியாக நடித்தார். அதே ஆண்டு அக்டோபரில் Netflix இல் வெளியான பரத்வாஜின் குஃபியாவிலும் நடித்தார். ஏப்ரல் 2023 இல் வெளியான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான ஜூபிலி என்றா அசல் தொடரில் நிலூஃபராகவும் நடித்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Chennai Express". The Tribune. 18 October 2019 இம் மூலத்தில் இருந்து 5 November 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191105122805/https://www.tribuneindia.com/news/chennai-express/848689.html. 
  2. "Wamiqa Gabbi: This is the First Time I will be Celebrating My Birthday Alone". News18. 29 September 2021 இம் மூலத்தில் இருந்து 22 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220222173456/https://www.news18.com/news/movies/wamiqa-gabbi-this-is-the-first-time-i-will-be-celebrating-my-birthday-alone-4255850.html. 
  3. "You Won't Believe These 5 Punjabi Actresses Looked Like This Before!!!". PTC Punjabi. 16 April 2019 இம் மூலத்தில் இருந்து 22 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220222173459/https://www.ptcpunjabi.co.in/then-now-these-rare-pics-of-top-punjabi-actresses-will-stun-you-see-pics. 
  4. "BFFs Wamiqa Gabbi and Mandy Takhar step in for each other". The Times of India. 31 October 2020 இம் மூலத்தில் இருந்து 22 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220222174130/https://timesofindia.indiatimes.com/entertainment/punjabi/movies/news/bffs-wamiqa-gabbi-and-mandy-takhar-step-in-for-each-other/articleshow/78973676.cms. 
  5. "All about perceptions: Wamiqa Gabbi". The Hindu. 18 October 2016 இம் மூலத்தில் இருந்து 24 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220224200509/https://www.thehindu.com/features/metroplus/All-about-perceptions/article13978870.ece. 
  6. "Wamiqa Gabbi is Geethanjali Selvaraghavan's heroine". The Indian Express. 23 March 2015 இம் மூலத்தில் இருந்து 18 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150718224214/http://indianexpress.com/article/entertainment/regional/wamiqa-gabbi-is-geethanjali-selvaraghavans-heroine/. 
  7. "Wamiqa Gabbi fondly shares her first picture with Tovino". The Times of India. 9 June 2017 இம் மூலத்தில் இருந்து 6 March 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220306153627/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/wamiqa-gabbi-fondly-shares-her-first-picture-with-tovino/articleshow/59068644.cms. 
  8. "9-Nine | 9-Nine Cast and Crew, Release Date and more". Pycker (in ஆங்கிலம்). Archived from the original on 25 September 2020. பார்க்கப்பட்ட நாள் 19 September 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
வாமிகா கபி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாமிகா_கபி&oldid=4114427" இலிருந்து மீள்விக்கப்பட்டது