Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

மார்கழி உற்சவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மார்கழி உற்சவம் என்பது ஆண்டுதோறும் மார்கழி மாதம் பிறந்துள்ளதையொட்டி அனைத்து இந்து கோயில்களிலும் நடைபெறும் விழாவாகும். [1][2]

Aandaal_alangaram1

மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது நீராடி அவரவர் விருப்ப ஆலயங்களில் இறைவனைத் திருப்பாவை அல்லது திருவெம்பாவை பாடல்களால் துதித்து வழிபடுவர். மார்கழி உற்சவ காலத்தில் பெண்கள் பாவை நோன்பு மற்றும் திருவெம்பாவை நோன்பு கடைப்பிடிப்பர்.

திருப்பாவை உற்சவம்

[தொகு]

வைணவ தலங்களில் பக்தர்கள் ஆண்டாள் பாசுரங்களை பாராயணம் செய்வர். மார்கழி மாதத்தில் ஏகாதசி திதி அன்று வைகுண்ட ஏகாதசி என்கின்ற ஒரு உற்சவம் நடைபெறும். மார்கழி நீராட்ட பகல்பத்து, இராப்பத்து உற்சவம், மார்கழி 27ம் நாள் மற்றும் கூடாரைவல்லி எனும் கோயில் ஊழியர்களுக்கு சன்மானம் வழங்கும் உற்சவம் நடைபெறும்.

திருவெம்பாவை உற்சவம்

[தொகு]

சிவ தலங்களில் திருவெம்பாவை பாசுரங்களை பாராயணம் செய்வர். மார்கழி திருவாதிரை அன்று ஆரூத்ரா தரிசனம் எனும் படியளத்தல் விழா நடைபெறும்.

தமிழ்நாட்டில்

[தொகு]

மார்கழி உற்சவத்தின் போது சென்னை நகரத்தில் உள்ள அரங்கங்களில் கருநாடக இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. மார்கழி உற்சவம்
  2. பான் பெருமாள் கோவில் மார்கழி உற்சவம் துவக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கழி_உற்சவம்&oldid=3786189" இலிருந்து மீள்விக்கப்பட்டது