Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய முதலீடு, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய முதலீடு, வணிகம்
தொழில்துறை அமைச்சர்
Minister of Investment, Trade and Industry
Menteri Pelaburan, Perdagangan dan Industri
منتري ڤلابوران ڤرداݢڠن دان اندوستري‎
தற்போது
தெங்கு சப்ருல் அசீஸ்
Tengku Zafrul Aziz

திசம்பர் 3, 2022 (2022-12-03) முதல்
மலேசிய முதலீடு, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சு
சுருக்கம்MITI
உறுப்பினர்மலேசிய அமைச்சரவை
அறிக்கைகள்மலேசிய நாடாளுமன்றம்
அலுவலகம்கோலாலம்பூர்
நியமிப்பவர்மலேசிய பேரரசர் (மலேசியப் பிரதமரின் பரிந்துரை)
உருவாக்கம்ஆகத்து 31, 1957 (1957-08-31)
முதலாமவர்டான் சியூ சின்
(Tan Siew Sin)
இணையதளம்www.miti.gov.my

மலேசிய முதலீடு, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Investment, Trade and Industry of Malaysia; மலாய்: Menteri Pelaburan, Perdagangan dan Industri Malaysia) என்பவர் மலேசிய அரசாங்கத்தின் முதலீடு, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சின் தலைமைப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆவார்.

மலேசிய முதலீடு, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்வகிக்கும் மலேசிய முதலீடு, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சு என்பது மலேசியாவின் முதலீடு, வணிகம் மற்றும் தொழில்துறையை நிர்வகிக்கும் மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும்.[1]

இந்த அமைச்சின் தலைமையகம் கோலாலம்பூர் சுல்தான் அஜி அகமத் சா சாலையில் (Jalan Sultan Haji Ahmad Shah) உள்ள மெனாரா கோபுர வளாகத்தில் (Menara MITI) அமைந்துள்ளது. புத்ராஜெயாவிற்கு இடமாற்றம் செய்யாத மூன்று அமைச்சுகளில் இதுவும் ஒன்றாகும்.[2]

பொது

[தொகு]

மலேசிய முதலீடு, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சைத் தவிர மலேசிய பாதுகாப்பு துறை அமைச்சு; மலேசிய பொதுப் பணி அமைச்சு ஆகிய இரு அமைச்சுகளும் இன்னும் புத்ராஜெயாவிற்கு இடம் மாறிச் செல்லவில்லை; கோலாலம்பூர் மாநகரிலேயே தலைமையகங்களைக் கொண்டுள்ளன.

அமைப்பு

[தொகு]
  • முதலீடு, வணிகம் மற்றும் தொழில்துறை மூத்த அமைச்சர்
    • பன்னாட்டு வணிகம் மற்றும் தொழில்துறை துணை அமைச்சர்
      • பொது செயலாளர்
        • பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
          • உத்திசார் திட்டமிடல் பிரிவு (Strategic Planning Division)
          • உத்திசார் வணிக செயலகப் பிரிவு (Strategic Trade Secretariat Division
          • சட்டப் பிரிவு (Legal Advisor Office)
          • மேலாண்மை சேவைகள் பிரிவு (Management Services Division)
          • உள் தணிக்கை பிரிவு (Internal Audit Division)
          • உத்திசார் தொடர்பு பிரிவு (Strategic Communication Unit)
          • சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு (Key Performance Indicator Unit)
          • ஒழுங்கமைவு பிரிவு (Integrity Unit)

முதலீட்டு துறை அமைச்சர்கள்

[தொகு]

மலேசிய முதலீடு, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.
அரசியல் கட்சிகள்:
      பாரிசான் நேசனல்

தோற்றம் பெயர்
(பிறப்பு - இறப்பு)
தொகுதி
கட்சி பொறுப்பு பதவியேற்பு பதவி விடுதல் பிரதமர்
(அமைச்சரவை)
தெங்கு சப்ருல் அசீஸ்
(Tengku Zafrul Aziz)
(பிறப்பு. 1973)
செனட்டர்
பாரிசான் நேசனல் (அம்னோ) முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் 5 ஏப்ரல் 2023 பதவியில் உள்ளார் அன்வார் இப்ராகிம்
(I)

பன்னாட்டு வணிகத் துறை அமைச்சர்கள்

[தொகு]

மலேசிய பன்னாட்டு வணிகத்துறை அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.
அரசியல் கட்சிகள்:
      பாரிசான் நேசனல்       வாரிசான் / பாக்காத்தான் அரப்பான்)       பெரிக்காத்தான் நேசனல்

தோற்றம் பெயர்
(பிறப்பு - இறப்பு)
தொகுதி
கட்சி பதவி பதவியேற்பு பதவி விடுதல் # பிரதமர்
(அமைச்சரவை)
ரபீடா அசீஸ்
(Rafidah Aziz)
(பிறப்பு. 1943)
கோலாகங்சார் மக்களவைத் தொகுதி
பாரிசான் நேசனல் (அம்னோ) பன்னாட்டு வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் 27 அக்டோபர் 1990 17 மார்ச் 2008 மகாதீர் முகமது
(IV • V • VI)
அப்துல்லா அகமது படாவி
(I • II)
முகிதீன் யாசின்
(Muhyiddin Yassin)
(பிறப்பு. 1947)
பாகோ மக்களவைத் தொகுதி
18 மார்ச் 2008 9 ஏப்ரல் 2009 அப்துல்லா அகமது படாவி
(III)
முசுதபா முகமட்
(Mustapa Mohamed)
(பிறப்பு. 1950)
ஜெலி மக்களவைத் தொகுதி
9 ஏப்ரல் 2009 9 மே 2018 நஜீப் ரசாக்
(I · II)
ஓங் கா சுவான்
(Ong Ka Chuan)
(பிறப்பு. 1954)
தஞ்சோங் மாலிம் மக்களவைத் தொகுதி
பாரிசான் நேசனல் (மசீச) பன்னாட்டு வணிகம் மற்றும் தொழில்துறையின் இரண்டாவது அமைச்சர் 29 சூலை 2015 9 மே 2018 நஜீப் ரசாக்
(II)
டாரெல் லெய்கிங்
(Darell Leiking)
(பிறப்பு. 1971)
பெனாம்பாங் மக்களவைத் தொகுதி
வாரிசான் பன்னாட்டு வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் 2 சூலை 2018 24 பிப்ரவரி 2020 மகாதீர் முகமது
(VII)
அசுமின் அலி
(Mohamed Azmin Ali)
(பிறப்பு. 1964)
(மூத்த அமைச்சர்)
கோம்பாக் மக்களவைத் தொகுதி
பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) பன்னாட்டு வணிகம் மற்றும் தொழில்துறையின் மூத்த அமைச்சர் 10 மார்ச் 2020 24 நவம்பர் 2022 முகிதீன் யாசின்
(I)
இசுமாயில் சப்ரி யாகோப்
(I)
தெங்கு சப்ருல் அசீஸ்
(Tengku Zafrul Aziz)
(பிறப்பு. 1973)
செனட்டர்
பாரிசான் நேசனல் (அம்னோ) பன்னாட்டு வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் 3 திசம்பர் 2022 5 ஏப்ரல் 2023 அன்வார் இப்ராகிம்
(I)

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Ministry's history started since the 1950's and it plays an important role in developing the Malaysian economic landscape - from an agri-based nation in the 60's to a nation driven by digitalisation, high-technology and sustainability now". Lusha. பார்க்கப்பட்ட நாள் 14 March 2023.
  2. "Miti moving to new HQ.The Star (Malaysia) 17 November 2015. Retrieved 17 November 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]