மருந்துப்போலி
மருந்துப்போலி அல்லது 'மருந்துக்குப் போலி' அல்லது 'ஆறுதல் மருந்து' (Placebo) அல்லது 'வெற்று மருந்து' என்பது இதன் வேறு பெயர்களாகும், உண்மையான மருந்துகளால் அல்லது மருத்துவ நடைமுறைகளால் கிடைக்கக்கூடிய பலன்களை வழங்கக்கூடிய போலியான மருந்துகள் அல்லது மருத்துவ நடவடிக்கைகள் ஆகும். மருத்துவம் தொடர்பிலான ஆய்வுகளில் இது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஏமாற்றுவேலை அல்லது வஞ்சகத்திலேயே தங்கியுள்ளது எனலாம். பொதுவான மருந்துப்போலிகள் சடத்தன்மையான, விளைவுகள் எதையும் தரும் ஆற்றலற்ற மாத்திரைகள், போலி அறுவைச் சிகிச்சை[2], மற்றும் பொய்யான தகவல்களின் அடிப்படையிலான சில நடைமுறைகள்[1] ஆகும். எனவே இதனை ஒரு போலி அல்லது தூண்டப்பட்ட மருத்துவக் குறுக்கீடு எனலாம்.
மருந்துப்போலியின் பயன்பாடு
[தொகு]ஒரு பொதுவான மருந்துப்போலியானது, ஒரு சடத்தன்மையான மாத்திரையை நோயாளிக்குக் கொடுத்து, அதனைப்பற்றிய உண்மையைக் கூறாது, அந்த மாத்திரையை உட்கொள்வதால், அவரது நோய் குணமாகும் எனக் கூறுதலாகும். இவை எவ்வித மருத்துவப் பண்பும் இல்லாத ஒரு பொருளாகவோ அல்லது குறிப்பிட்ட நோய்க்கான மருந்தாகவோ இருக்காமல் போனாலும், இதைத் தரும் போது நோயாளிகள் ஏதோ ஒரு வகையில் மனநிறைவுற்று அவரிடம் உளவியல் மாற்றம் ஏற்பட்டு அது அவரின் உடலிலும் மாற்றங்களை உண்டு செய்வது அறியப்பட்டுள்ளது. அந்த நோயாளியும் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடியவாராக இருந்து, அதனை நோய் தீர்க்கும் இயல்புடைய மாத்திரைதான் என முற்றாக நம்பும்போது, அவரது உடல்நிலையில் முன்னேற்றமேற்படுவதாக உணருவார். இதனை 'மருத்துப்போலித் தாக்கம்' என்பர்.
மருந்துப்போலி தொடர்பான நெறிமுறைகள்
[தொகு]இது தொடர்பாக பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றபோதிலும், மருத்துவத்தில் இதன் பயன்பாடும், மருத்துவ ஆய்வுகளும் தொடர்ந்து பரவலாக நடைபெற்று வருகின்றன[3]. அத்துடன் இது அன்றாட வாழ்க்கையில் காணக்கூடிய ஒரு பொதுவான நிகழ்வாகவும் இருக்கிறது[3]. உண்மையில் எந்த ஓர் உண்மையான மருத்துவ நடவடிக்கையிலும்கூட இப்படியான நம்பிக்கை ஒரு பகுதியாக இருக்கின்றது[4]. மருந்துப்போலித் தாக்கமானது உடல் சார்ந்த நலத்தில் மூளையின் பங்கையும், நோயாளியின் ஏற்கும் தன்மையையும் சுட்டி நிற்கிறது. இருப்பினும், இந்த முறையானது மருத்துவத்தில் சிகிச்சைக்காகப் பயன்படும்போது, மருத்துவர்கள் தாம் தொழிலை ஆரம்பிக்கையில் எடுக்கும் Hippocrates இன் உறுதிமொழியை மீறுவதாகவும், நோயாளி மருத்துவருக்கிடையிலான நேர்மைத் தன்மையை சீர் குலைப்பதாகவும் கருதப்படுகிறது[5]. அறிவியல், தொழில்நுட்பத்துக்கான பிரித்தானியப் பாராளுமன்றக் குழு, மருந்துப்போலியைப் பற்றிய தனது அறிக்கையில், இதில் நோயாளி குறிப்பிட்டளவு ஏமாற்றப்படுவதாயும், முழுமையான மருந்துப்போலி சிகிச்சையானது தவறான மருத்துவ முறை என்றும் கூறியுள்ளது[2].
மருந்துப்போலியின் வரலாறு
[தொகு]மருத்துவ முறைகளின் ஆரம்பம் தொட்டே, இந்த மருந்துப்போலி ஏதோ ஒரு வகையில் மருத்துவத்துடன் இணைந்தே இருக்கின்றது. 1955 இல் Henry K. Beecher என்பவர் எழுதிய The Powerful Placebo என்ற வெளியீட்டுக்குப் பின்னர், இந்த மருந்துப்போலி நடைமுறை மருத்துவத்தில் முக்கியமானதாகக் கருதப்பட்டது[6]. ஆனால் 2001 இல் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ சோதனை ஆய்வின் மதிப்பீடானது, மேற்கூறப்பட்ட கருத்தை கேள்விக்குள்ளாக்கியது. அந்த ஆய்வறிக்கையானது, மருந்துப்போலி நடவடிக்கைகளால், வலி போக்கப்படுவதும் அது தொடர்பான சில பலன்களும் தவிர, சிகிச்சையின் விளைவுகளை நிறுவுவதற்கு எந்த ஆதாரமுமில்லை எனக் கூறியது[6]. அந்தக் கட்டுரைக்கு பலத்த எதிர்ப்புகள்[7] வந்த போதிலும், அந்தக் கட்டுரையை எழுதியவர்கள் மீண்டும் தங்களது வாதத்தை உறுதிப்படுத்தி ஒரு அறிக்கையை 2010 இல் வெளியிட்டார்கள்[8]. அனேகமான மருத்துவப் போலி தொடர்பான ஆய்வுகள் ஆய்வின் தொடக்கம் முதல், முடிவு வரையிலான வேறுபாடுகளை மட்டும் கணக்கிலெடுத்த வேளையில், அந்தக் கட்டுரை ஆசிரியர்கள், நோய்த்தாக்கத்தின் இயற்கையான நோய் அதிகரிப்பையும், மருத்துவப்போலி தாக்கத்தையும் வேறுபடுத்தியறிய, மருத்துவப்போலி சிகிச்சைக்குட்பட்ட ஒரு பிரிவினரையும், சிகிச்சைக்குட்படுத்தாத ஒரு பிரிவினரையும் தங்கள் ஆய்வில் உள்ளடக்கியிருந்தனர்[6].
மருந்து உற்பத்தியில் முக்கியத்துவம்
[தொகு]புதியதொரு மருந்தைச் சந்தையில் அறிமுகப்படுத்தும் முன் அம் மருந்தை வெற்று மருந்தோடு பலமுறை ஒப்பிட்டுப் பார்ப்பர். வெற்று மருந்தைப் போல் இக்குறிப்பிட்ட மருந்து உளவியல் விளைவுகளால் உடலியங்கியல் விளைவுகளை உண்டு செய்கின்றதா அல்லது உண்மையிலேயே உடலியங்கியல் விளைவுகளைத் தான் உண்டு செய்கின்றதா என ஆய்வு செய்து அறிவார்கள். ஓப்பிய எதிர் மருந்துகள் கொடுப்பதன் மூலம் வெற்று மருந்து உளவியல் விளைவுகளால் உண்டாக்கும் உடலியங்கியல் விளைவுகளைத் தடுக்கலாம்.
தொழில் நுட்ப உதவிகள்
[தொகு]இந்தியாவில் மருந்துப்போலியை கண்டறிய பார்மாசெக்யூர் நிறுவனம் இணையதளத்தில் இலவச சேவையைத் தந்துள்ளது. மருந்து அட்டையில் குறிப்பிட்டுள்ள ஒன்பது இலக்கு எண்ணை, அதன் இணைய தளத்தில் தேடினால் போலியானதா என்பது பற்றிய தகவல் கிடைக்கும்.[9] இச்சேவையை கைபேசியின் குறுஞ்செய்தி மூலமாக 9901099010 என்ற எண்ணிற்கு மருந்து அட்டையின் ஒன்பது இலக்க எண்ணை அனுப்பி பெறலாம்.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- ராசியான மருந்து, ராசியான டாக்டர் - நிஜமா?
- The Placebo Effect Skeptic's Dictionary இலுள்ள விளக்கம்
- The Placebo Effect YouTube இல் காணப்படும் விளக்கம்.
- Placebos: cracking the code part 1 பரணிடப்பட்டது 2012-07-06 at the வந்தவழி இயந்திரம் part 2 பரணிடப்பட்டது 2012-07-06 at the வந்தவழி இயந்திரம் BBC/Discovery இல் நிகழ்ச்சி.
- "The Placebo Effect: Do You Believe Your Teacher?" பரணிடப்பட்டது 2011-06-04 at the வந்தவழி இயந்திரம் Ben Goldacre on The Guardian and on Wikibooks.
- "Placebos are getting more effective. Drugmakers are desperate to know why." Wired magazine on the power of the placebo. Retrieved 2010-07-22
- Biological, clinical, and ethical advances of placebo effects The Lancet (2010)
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Lanotte M, Lopiano L, Torre E, Bergamasco B, Colloca L, Benedetti F (November 2005). "Expectation enhances autonomic responses to stimulation of the human subthalamic limbic region". Brain, Behavior, and Immunity 19 (6): 500–9. doi:10.1016/j.bbi.2005.06.004. பப்மெட்:16055306.
- ↑ 2.0 2.1 UK Parliamentary Committee Science and Technology Committee. "Evidence Check 2: Homeopathy".
- ↑ 3.0 3.1 Hróbjartsson A, Norup M (June 2003). "The use of placebo interventions in medical practice--a national questionnaire survey of Danish clinicians". Evaluation & the Health Professions 26 (2): 153–65. doi:10.1177/0163278703026002002. பப்மெட்:12789709. http://ehp.sagepub.com/cgi/pmidlookup?view=long&pmid=12789709.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Eccles R (2002). "The powerful placebo in cough studies?". Pulm Pharmacol Ther 15 (3): 251–2. doi:10.1006/pupt.2002.0364. பப்மெட்:12099783.
- ↑ David H. Newman (2008). Hippocrates' Shadow. Scribner. pp. 134–159. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4165-5153-0.
- ↑ 6.0 6.1 6.2 Hróbjartsson A, Gøtzsche PC (2001). "Is the placebo powerless? An analysis of clinical trials comparing placebo with no treatment". New England Journal of Medicine 344 (21): 1594–1602. doi:10.1056/NEJM200105243442106. பப்மெட்:11372012. http://content.nejm.org/cgi/content/short/344/21/1594.
- ↑ Moerman DE, Jonas WB (2002). "Deconstructing the placebo effect and finding the meaning response". Ann Intern Med. 136 (6): 471–6. பப்மெட்:11900500. http://www.annals.org/cgi/content/full/136/6/471.
- ↑ Hróbjartsson A, Gøtzsche PC (2010). "Placebo interventions for all clinical conditions". Cochrane Database Syst Rev 2010 (1): CD003974. doi:10.1002/14651858.CD003974.pub3. பப்மெட்:14651858.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-02. பார்க்கப்பட்ட நாள் 2012-07-12.