போளூர் (சட்டமன்றத் தொகுதி)
போளூர் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
மக்களவைத் தொகுதி | ஆரணி |
நிறுவப்பட்டது | 1951-நடப்பு |
மொத்த வாக்காளர்கள் | 2,43,921[1] |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் அக்ரி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி | |
கட்சி | அதிமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
போளூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 66. இது ஆரணி மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. வந்தவாசி, கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர், ஆரணி, செஞ்சி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.இந்த தொகுதியை பொறுத்தவரை வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 30 சதவீதமும், ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீதமும், இதர பிரிவினர் 45 சதவீதமும் உள்ளனர்.[2]
இங்கு விவசாயம், நெசவு தொழில் அதிகளவில் உள்ளன. போளூர் பகுதியில் மாம்பட்டு, எழுவாம்பாடி, வில்வாரணி, ஒண்ணுபுரம், அல்லியாளமங்களம் போன்ற கிராமங்களில் நெசவு தொழில் உள்ளது. இங்கு தயாரிக்கும் வேட்டி, சேலை, லுங்கிகள் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]போளூர் தொகுதியில் போளூர் ஒன்றியத்தில் உள்ள 94 கிராமங்களும், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உள்ள 76 கிராமங்களும், பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள 48 கிராமங்களும் என 218 கிராமங்கள் உள்ளன.
- சேத்துப்பட்டு வட்டம் (பகுதி)
மேலானூர், சூத்திரகாட்டேரி, அன்மருதை, ஆவணியாபுரம், மேல்சாத்தமங்கலம், நரியம்பாடி, வினாயகபுரம், கோணையூர், கெங்காபுரம், கொழப்பலூர், இமாபுரம், நாராயணமங்கலம், மரக்குணம், அல்லியேயந்தல், மகாதேவிமங்கலம், மேல்பாளையம், தவணி, தெள்ளாரம்பட்டு, நமத்தோடு, செம்மம்பாடி, அனாதிமங்கலம், கோணாமங்கலம், மேலப்பூண்டி, விசாமங்கலம், மேலத்தாங்கல், ஜெகந்நாதபுரம், அரசம்பட்டு, நெடுங்குணம், தென்கடப்பந்தாங்கல், பெரணம்பாக்கம், மோரக்கனியனூர், மேல்வில்லிவலம், வேப்பம்பட்டு மற்றும் மேல்நந்தியம்பாடி கிராமங்கள்.
- போளூர் வட்டம் (பகுதி)
துளுவபுபகிரி, வெள்ளுர், சேதாரம்பட்டு, பார்வதியகரம, அலியாபாத், எலுப்பக்குணம், நாராயணமங்கலம், காங்கிரானந்தல், புஷ்பகிரி, துரிஞ்சிகுப்பம், விளாங்க்குப்பம், கல்வாசல், முனியந்தாங்கல், சந்தவாசல், கஸ்தும்பாடி, ஏந்துவம்பாடி, முக்குரும்பை, கீழ்பட்டு, வடமாதிமங்கலம், தேப்பனந்தல், சித்தேரி, கேளூர், ஆத்துவாம்பாடி, கட்டிப்பூண்டி, பால்வார்துவென்றான், எட்டிவாடி, ஆலம்பூண்டி, ஓதியந்தாங்கல், ராயங்குப்பம், கூடலூர், சதுப்பேரிபாளையம், சதுப்பேரி, மடவிளாகம், ஜம்புக்கோணம்பட்டு, அரியாத்தூர், திருமலை, செங்குணம், பொத்தரை, பெரியகரம், அத்திமூர், களியம், திண்டிவனம், ரெண்டேரிப்பட்டு, குன்னத்தூர், குருகப்பாடி, வீரசம்பனூர், மோதனபாளையம், தும்பூர், இந்திரவனம், அப்பேடு, உலகம்பட்டுமூ, கொத்தந்தவாடி, கொளக்கரவாடி, நரசிங்கபுரம், மொடையூர், ஓடநகரம், அரும்பலூர், மாணிக்கவள்ளி, மண்டகொளத்தூர், ஈயாகொளத்தூர், வெண்மணி, பாப்பாம்பாடி, மாம்பட்டு, எழுவம்பாடி, ஜடதாரிகுப்பம், சோமந்தபுத்தூர், எடப்பிறை, திரிச்சூர், படியம்பட்டு, சு-நம்மியந்தல், காங்கேயனூர், புதுப்பாளையம், வசூர், சனிக்கவாடி, கரைப்பூண்டி, புலிவாநந்தால், ஓட்டேரி, மட்டப்பிறையூர், கொழாவூர், கொரல்பாக்கம், சோத்துக்கனி, செம்மியமங்கலம், அல்லியாளமங்கலம், ஆத்துரை, தச்சம்பாடி, நம்பேடு, தேவிமங்கலம், செய்யானந்தல், சித்தாத்துரை, பேரணம்பாக்கம், ராந்தம், விளாபாக்கம், பெலாசூர், குருவிமலை, மன்சுராபாத், செவரப்பூண்டி, எடயன்குஸத்தூர், மருத்துவம்பாடி மற்றும் கெங்கைசூடாமனி கிராமங்கள்.
போளூர் (பேருராட்சி) சேத்துப்பட்டு பேரூராட்சி, களம்பூர் பேரூராட்சி[3]
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | மாணிக்கவேல் நாயக்கர் | பொது நல கட்சி | 19508 | 54.65 | அண்ணாமலை செட்டி | காங்கிரசு | 16190 | 45.35 |
1957 | எசு. எம். அண்ணாமலை | சுயேச்சை | 17222 | 42.96 | டி. பி. கேசவ ரெட்டியார் | சுயேச்சை | 10616 | 26.48 |
1962 | கேசவ ரெட்டியார் | திமுக | 29283 | 62.16 | பெரியசாமி | காங்கிரசு | 17828 | 37.84 |
1967 | எசு. குப்பம்மாள் | திமுக | 33292 | 56.92 | எசு. எம். அண்ணாமலை | காங்கிரசு | 20224 | 34.58 |
1971 | தொ. ப. சீனிவாசன் | திமுக | 34728 | 57.92 | டி. ஆர். நடேச கவுண்டர் | ஸ்தாபன காங்கிரசு | 25232 | 42.08 |
1977 | கே. ஜே. சுப்பிரமணியன் | அதிமுக | 24631 | 37.82 | எசு. முருகையன் | திமுக | 21902 | 33.63 |
1980 | எல். பலராமன் | காங்கிரசு | 35456 | 48.92 | எ. செல்வன் | அதிமுக | 33303 | 45.95 |
1984 | ஜெ. இராசாபாபு | காங்கிரசு | 52437 | 62.40 | டி. கே. சுப்பிரமணியன் | திமுக | 30319 | 36.08 |
1989 | ஏ. ராஜேந்திரன் | திமுக | 31478 | 38.80 | எசு. கண்ணன் | அதிமுக (ஜெ) | 21334 | 26.29 |
1991 | டி. வேதியப்பன் | அதிமுக | 60262 | 62.13 | எ. இராசேந்திரன் | திமுக | 21637 | 22.31 |
1996 | ஏ. ராஜேந்திரன் | திமுக | 59070 | 55.45 | அக்ரி. எசு. கிருசுணமூர்த்தி | அதிமுக | 34917 | 32.78 |
2001 | நளினி மனோகரன் | அதிமுக | 59678 | 51.31 | சி. ஏழுமலை | திமுக | 48871 | 42.02 |
2006 | பி. எசு. விஜயகுமார் | காங்கிரசு | 58595 | 47 | டி. வேதியப்பன் | அதிமுக | 51051 | 41 |
2011 | எல். ஜெயசுதா | அதிமுக | 92391 | 55.42 | எதிரொலி மணியன் | பாமக | 63846 | 38.30 |
2016 | கே. வி. சேகரன் | திமுக | 66558 | 34.24 | எம். முருகன் | அதிமுக | 58315 | 29.98 |
2021 | அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி | அதிமுக[4] | 97,732 | 48.38 | கே.வி.சேகரன் | திமுக | 88,007 | 43.57 |
- 1977ல் ஜனதாவின் டி. எம். சுப்ரமணியன் 11279 (17.32%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் காங்கிரசின் ஜெ. இராசாபாபு 15453 (19.05%) & அதிமுக ஜானகி அணியின் எ. செல்வன் 12096 (14.91%) வாக்குகள் பெற்றனர்.
- 1991ல் பாமகவின் கே. ஜி. ஏழுமலை 13026 (13.43%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் எசு. சி. புருசோத்தமன் 6867 வாக்குகள் பெற்றார்.
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
வெளியிட்ட தேதி | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | ஆதாரம் |
---|---|---|---|---|---|
10.01.2018 | 114424 | 117389 | 2 | 231835 | திருவண்ணாமலை மாவட்ட இணையதளம் |
26.12.2019 | 115793 | 119324 | 5 | 249398 | திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை |
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
[தொகு]ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
[தொகு]2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 24 Jan 2022.
- ↑ அதிமுக- திமுக நேருக்குநேர் போதும் போளூர் தொகுதி கண்ணோட்டம். மாலைமலர். 17 மார்ச் 2021. Archived from the original on 2021-08-11. பார்க்கப்பட்ட நாள் 2021-08-11.
{{cite book}}
: Check date values in:|date=
(help) - ↑ http://eci.nic.in/delim/Final_Publications/Tamilnadu/Final%20Notification%20&%20Order%20.pdf பரணிடப்பட்டது 2016-08-04 at the வந்தவழி இயந்திரம் தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு
- ↑ போளூர் சட்டமன்றத் தேர்தல் 2021, ஒன் இந்தியா