Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

புரொட்டோஸ்டோம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Protostomes
புதைப்படிவ காலம்:Ediacaran - Recent
A Caribbean Reef Squid, an example of a protostome.
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
துணைத்திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Protostomia

Grobben, 1908
Superphylums

புரொட்டோஸ்டோம் (Protostomia) என்பது புறமுதலுருப்படை, இடைமுதலுருப்படை, அகமுதலுருப்படை ஆகிய மூன்று மூலவுயிர்ப்படைகள் உடைய முப்படை விலங்குகளின் இரு பிரதான பிரிவுகளில் ஒன்றாகும். மற்றைய விலங்குப் பிரிவு டியூட்டெரோஸ்டோம் ஆகும். இரண்டு விலங்குப் பிரிவுகளிடையே முளையவியல் விருத்தியில் பல பிரதான வித்தியாசங்கள் உள்ளன.[1] புரொட்டோஸ்டோம் எனும் சொல் முதல் வாய் எனப் பொருள்படும். புரொட்டோஸ்டோம்களின் முளைய விருத்தியின் போது பின்வரும் பிரதான நிகழ்வுகள் இடம்பெறும்:

  • இவற்றின் முட்டைக் கலமே தீர்க்கப்பட்ட முட்டையாக உள்ளது. முட்டையின் குழியவுரு அக, இடை, புற முதலுருப்படைகளாகப் பிரிக்கப்பட்ட வகையில் உள்ளது.
  • எட்டுக்கலங்களின் நிலையின் போது சுருளிப் பிளவு முறையில் கலங்கள் இரட்டிப்படைந்து செல்லும்.
  • புன்னுதரனாகும் போது அரும்பரில்லி ஆதிக் கருக்குடலை ஆக்கும். பின்னர் வளர்ச்சியின் போது அரும்பரில்லி நிறையுடலியில் வாயாக மாற்றமடைகின்றது.
  • உடற்குழி காணப்பட்டால், அது பிளவுக் குழிய முறையில் உருவாக்கப்படும்.[2]

பிரதான புரொட்டோஸ்டோம் கணங்கள்:

மேற்கோள்கள்

[தொகு]
  1. Arendt, D.; Technau, U.; Wittbrodt, J. (4 January 2001). "Evolution of the bilaterian larval foregut". Nature 409 (6816): 81–85. doi:10.1038/35051075. பப்மெட்:11343117. http://www.nature.com/nature/journal/v409/n6816/full/409081a0.html. பார்த்த நாள்: 2008-07-14. 
  2. Hejnol, A; Martindale, MQ (Nov 2008). "Acoel development indicates the independent evolution of the bilaterian mouth and anus.". Nature 456 (7220): 382–6. doi:10.1038/nature07309. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. பப்மெட்:18806777. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரொட்டோஸ்டோம்&oldid=2189694" இலிருந்து மீள்விக்கப்பட்டது