பீனைல் கூட்டம்
கரிம வேதியியலில், பீனைல் கூட்டம் (Phenyl group) அல்லது பீனைல் வளையம் (Phenyl ring) என்பது C6H5 என்ற வாய்பாட்டைக் கொண்ட அணுக்களின் சக்கரக் கூட்டம் ஆகும்.[1] பீனைல் கூட்டத்திற்கும் பென்சீனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. பீனைல் கூட்டத்தில் அறுகோணத் தளத்தில் இணைக்கப்பட்ட ஆறு கரிம அணுக்கள் உண்டு.[2] இவற்றுள் ஐந்து கரிம அணுக்கள் ஒற்றைப் பிணைப்பின் மூலம் நீரிய அணுக்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். எஞ்சிய கரிம அணு பதிலீட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
பெயரீடு
[தொகு]பீனைல் கூட்டமானது, பொதுவாக, Phஆல் அல்லது Φஆல் குறிக்கப்படும்.[3] சில வேளைகளில் பென்சீனை PhH என்றும் குறிப்பதுண்டு.[4] பீனைல் கூட்டங்கள் பொதுவாக வேறு அணுக்களுடனோ கூட்டங்களுடனோ இணைக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, முப்பீனைல் மெதேன் (Ph3CH) ஒரே காபன் அணுவுடன் இணைக்கப்பட்ட மூன்று பீனைல் கூட்டங்களைக் கொண்டுள்ளது. பெரும்பாலான பீனைல் சேர்மங்களின் பெயர்களில் பீனைல் என்னும் சொல் வருமாறு எழுதுவதில்லை. C6H5Clஐ பீனைல் குளோரைடு என அழைக்கக்கூடியதாக இருப்பினும், பொதுவாக அதனைக் குளோரோபென்சீன் என்றே அழைப்பதுண்டு. சில சிறப்பு நிலைமைகளில் பீனைல் எதிரயனி (C6H5-), பீனைல் நேரயனி (C6H5+) , பீனைல் மூலிகம் (C6H5·) போன்ற தனியாக்கப்பட்ட பீனைல் கூட்டங்களும் இனங்காணப்பட்டுள்ளன.[5]
பீனைல் கூட்டத்திலுள்ள நீரிய அணுக்கள் பதிலிடப்பட்ட கூட்டங்களின் பெயர்களும் பீனைல் என முடியுமாறே பெயரிடப்படும். எடுத்துக்காட்டாக, Cl5C6 என்பது ஐங்குளோரோபீனைல் எனப் பெயரிடப்படும்.[6]
இதனையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Polystyrene". Encyclopædia Britannica. 2 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 15 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ Daniel L. Hartl (2012). Essential Genetics. Jones & Bartlett Publishers. p. 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781449686482.
- ↑ Arun Bahl (2010). Advanced Organic Chemistry. S. Chand. p. 959. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788121935159.
- ↑ Riffard P. Jean-Gilles (2007). Acetyl-nitrate Nitration of Toluene by Zeolite Catalysts and Methods of Oxidation of Graphite Nanofibers. ProQuest. p. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780549120629.
- ↑ Athanassios Nicolaides, David M. Smith, Frank Jensen & Leo Radom (ஆகத்து 1997). "Phenyl Radical, Cation, and Anion. The Triplet−Singlet Gap and Higher Excited States of the Phenyl Cation". J. Am. Chem. Soc. 119 (34): 8083-8088. doi:10.1021/ja970808s.
- ↑ Pentachlorophenyl Organomercury Compounds. Defense Technical Information Center. 1964.
வெளியிணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் பீனைல் கூட்டம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.