Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

பெஹிஸ்ட்டன் கல்வெட்டு

ஆள்கூறுகள்: 34°23′26″N 47°26′9″E / 34.39056°N 47.43583°E / 34.39056; 47.43583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
Bisotun
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைCultural
ஒப்பளவுii, iii
உசாத்துணை1222
UNESCO regionஆசியா பசுபிக் (ஈரான்)
பொறிப்பு வரலாறு
பொறிப்பு2006 (30th தொடர்)
பெஹிஸ்ட்டன் கல்வெட்டு is located in ஈரான்
பெஹிஸ்ட்டன் கல்வெட்டு
Location of பெஹிஸ்ட்டன் கல்வெட்டு in Iran.

பெஹிஸ்ட்டன் கல்வெட்டு மூன்று வெவ்வேறுவிதமான ஆப்பெழுத்து (cuneiform) முறைகளில் பழைய பாரசீக மொழி, ஈலமைட்டு, பபிலோனிய மொழி ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட ஒரே உரையைக் கொண்ட ஒரு கல்வெட்டு ஆகும். படஎழுத்து முறைக்கு ரொசெட்டா கல்வெட்டு எப்படியோ, அப்படியே ஆப்பெழுத்துக்கு இக் கல்வெட்டு ஆகும். ஆப்பெழுத்துக்களை வாசித்து அறிவதில் இக்கல்வெட்டுப் பெரும் பங்காற்றியது. இது ஈரானில் உள்ள கெர்மன்ஷா மாகாணத்தில் உள்ளது.[1][2][3]

பிரித்தானிய இராணுவ அலுவலரான சர் ஹென்றி ரோலின்சன் (Sir Henry Rawlinson) என்பவர், 1835, 1843 ஆகிய ஆண்டுகளில் இரண்டு பகுதிகளாக இக் கல்வெட்டை எழுத்துப்பெயர்ப்புச் செய்வித்தார். 1838 ஆம் ஆண்டில், பழைய பாரசீக மொழிப் பகுதியை ரோலின்சனால் மொழிபெயர்க்க முடிந்தது. எலமைட்டு மற்றும் பபிலோனிய மொழிப் பகுதிகள் 1843 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ரோலின்சனாலும், மற்றவர்களாலும் மொழிபெயர்க்கப்பட்டன. பபிலோனிய மொழி அக்காடிய மொழியின் பிற்கால வடிவம் ஆகும். இரண்டுமே செமிட்டிக் மொழிகள்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Arya in Iran".
  2. Tavernier, Jan (2021). "A list of the Achaemenid Royal Inscriptions by language" (in fr). Phoenix 67 (2): 1–4. பன்னாட்டுத் தர தொடர் எண்:0031-8329. https://dial.uclouvain.be/pr/boreal/object/boreal:268449. பார்த்த நாள்: 2023-03-25. "The rock inscription itself contains no less than 414 lines of Old Persian, 112 lines of Babylonian and 260 lines of Elamite (in an older and a younger version).". 
  3. "The Bīsitūn Inscription [CDLI Wiki]". cdli.ox.ac.uk. 2015-09-06. Archived from the original on 2023-03-25. பார்க்கப்பட்ட நாள் 2023-03-25. This tri-lingual inscription has 414 lines in Old Persian cuneiform, 260 in Elamite cuneiform, and 112 in Akkadian cuneiform (Bae: 2008)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெஹிஸ்ட்டன்_கல்வெட்டு&oldid=4101064" இலிருந்து மீள்விக்கப்பட்டது