பெசுட் மாவட்டம்
பெசுட் மாவட்டம் | |
---|---|
Besut District | |
ஆள்கூறுகள்: 5°35′N 102°30′E / 5.583°N 102.500°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | திராங்கானு |
மாவட்டம் | பெசுட் |
தொகுதி | கம்போங் ராஜா |
உள்ளூராட்சி | பெசுட் நகராட்சி |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | ரொசாலி சாலே (Haji Rozali bin Salleh)[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,233.68 km2 (476.33 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,40,952 |
• மதிப்பீடு (2020) | 1,75,800 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 22xxx |
தொலைபேசி | +6-09-6 |
வாகனப் பதிவெண்கள் | T |
பெசுட் மாவட்டம் (ஆங்கிலம்: Besut District; மலாய்: Daerah Besut; சீனம்: 勿述县; ஜாவி: بسوت) என்பது மலேசியாவின் திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். திராங்கானு மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.
பெசுட் மாவட்டத்திற்கு கிழக்கில் தென் சீனக்கடல்; வடக்கிலும் மேற்கிலும் கிளாந்தான் மாநிலம் எல்லைகளாக உள்ளன. இந்த மாவட்டம் திராங்கானு மாநிலத்தின் வடக்கு நுழைவாயிலாக அமைகின்றது.
பொது
[தொகு]கம்போங் ராஜா நகரம் (Kampung Raja), பெசுட் மாவட்டத்தின் தலைநகரம். இருப்பினும் பெசுட் மாவட்டத்தில் உள்ள மற்றொரு நகரான ஜெர்த்தே நகரம் (Jerteh), கம்போங் ராஜா நகரத்தைவிட மிகவும் வளர்ச்சி அடைந்த நகரமாகத் திகழ்கின்றது.
மற்றொரு முக்கிய நகரம் மீன்பிடித் துறைமுகமான கோலா பெசுட் (Kuala Besut). தவிர சாபி (Jabi), அப்பால் (Apal), பாசிர் அகார் (Pasir Akar) மற்றும் தெம்பிலா (Tembila) போன்ற பிற சிறிய நகரங்களும் கிராமங்களும் இந்த மாவட்டத்தில் உள்ளன.
நிர்வாகப் பிரிவுகள்
[தொகு]பெசுட் மாவட்டம் 16 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை:
- புக்கிட் கெனாக் - Bukit Kenak
- புக்கிட் புத்திரி - Bukit Puteri
- உலு பெசுட் - Hulu Besut
- சாபி - Jabi
- கம்போங் ராஜா - Kampung Raja
- கெலுவாங் - Keluang
- கெரண்டாங் - Kerandang
- கோலா பெசுட் - Kuala Besut
- குபாங் பெம்பான் - Kubang Bemban
- லுபோக் காவா - Lubuk Kawah
- பாசிர் அக்கார் - Pasir Akar
- பெலாகாட் - Pelagat
- பெங்காலான் நங்கா - Pengkalan Nangka
- பெர்கெந்தியான் தீவுகள் - Perhentian Islands
- தெம்பிலா - Tembila
- தெனாங் - Tenang
மக்கள் தொகையியல்
[தொகு]2010-ஆம் ஆண்டு நிலவரப்படி, பெசுட் மாவட்டத்தின் மக்கள் தொகை 140,952 பேர். மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். பிற இனத்தவர்களில் சீனர் மற்றும் சயாமியர்களும் (Siamese) (தாய்லாந்து மக்கள்) அடங்குவர்
பெசுட்டில் உள்ள பெரும்பாலான மலாய்க்காரர்கள், திராங்கானிய அடையாளத்தை விட (Terengganuan identity) கிளந்தானிய அடையாளத்துடன் (Kelantanese identity) தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். திராங்கானு மலாய் மொழிக்குப் (Terengganu Malay) பதிலாக அவர்கள் கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழியை (Kelantanese Malay) பேச முனைகிறார்கள் என்பது ஒரு முக்கிய எடுத்துக்காட்டு.
சீன மக்களைப் பொறுத்த வரையில், ஜெர்த்தே நகருக்கு அருகில் அதிக அளவில் வாழ்கின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Administrator. "Laman Web Rasmi Pejabat Daerah Dan Tanah Besut 1". pdtbesut.terengganu.gov.my.
- ↑ Administrator. "Laman Web Rasmi Pejabat Daerah Dan Tanah Besut 2". pdtbesut.terengganu.gov.my.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Besut. தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.