பரீத்கோட் இராச்சியம்
பரீத்கோட் இராச்சியம் ਫ਼ਰੀਦਕੋਟ ਰਿਆਸਤ பரீத்கோட் இராச்சியம் | |||||
மன்னர் அரசு பிரித்தானிய இந்தியா | |||||
| |||||
கொடி | |||||
1911ஆண்டு பஞ்சாப் நிலப்படத்தில் பரீத்கோட் இராச்சியம் | |||||
வரலாற்றுக் காலம் | பிரித்தானிய இந்தியா | ||||
• | நிறுவப்பட்டது | 1803 | |||
• | இந்திய விடுதலை | 1947 | |||
பரப்பு | |||||
• | 1892 | 1,652 km2 (638 sq mi) | |||
Population | |||||
• | 1892 | 97,034 | |||
மக்கள்தொகை அடர்த்தி | 58.7 /km2 (152.1 /sq mi) |
பரீத்கோட் இராச்சியம் (Faridkot State) [1] பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில் பிரித்தானிய இந்தியாவிற்கு வெளியில் பஞ்சாப் பகுதியில் இருந்த தன்னாட்சி பெற்ற சீக்கிய சுதேச சமஸ்தானம் ஆகும். இது தற்கால பஞ்சாப் மாநிலத்தில் பரித்கோட் மாவட்டத்தின் பகுதியாக உள்ளது.
வரலாறு
[தொகு]ஜெய்சல்மேர் இராச்சியத்தை நிறுவிய கபூரா 1643இல் கோட்காபுரா என்ற வேள்புல அரசை நிறுவினார். இது 1743இல் பிரிந்து பரூத்கோட் உருவானது. 1807இல் இரு இராச்சியங்களும் இலாகூரின் சீக்கியப் பேரரசின் கீழ் இருந்தன. ஆனால் 1809இல் இது பிரித்தானியரின் துணைப்படைத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பில் இருந்தது. இந்த நிலை 1947இல் இந்திய விடுதலை வரை நீடித்தது.
முதலாம் சீக்கியப் போரின்போது பரீத்கோட்டின் ஆட்சியாளராக இருந்த பகார்கா சிங் பிரித்தானியர்களுடன் இணைந்து சீக்கியபே பேரரசை எதிர்த்தார். இதற்கு கைமாறாக பிரித்தானியர்களால் கோட்காபுராவும் நாபா இராச்சியத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டது. பெரும் இந்தியக் கிளர்ச்சியின் போதும் பிரித்தானியரை ஆதரித்தனர். 1858இல் பரீத்கோட் ஆட்சியாளர் மன்னராக ஏற்கப்பட்டனர். 11 துப்பாக்கி வணக்கம் வழங்கப்பட்டது.
1941இல் இந்த மன்னராட்சியின் பரப்பளவு 1652 ச.கிமீயாக இருந்தது; மக்கள்தொகை 188,000 ஆக இருந்தது. ராசா அரிந்தர் சிங் (1918-1956) சூலை 15, 1948இல் புதிய இந்திய ஒன்றியத்துடன் இணைய ஒப்பமிட்டார். ஆகத்து 20, 1948இல் உருவான பெப்சு மாநிலத்தின் அங்கமாயிற்று. நவம்பர் 1, 1956இல் பெப்சு மாநிலம் பஞ்சாபு மாநிலத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது.
1878-1901 காலகட்டத்தில் பரீத்கோட் சொந்தமான அஞ்சல்துறையும் தனக்கான அஞ்சல் தலைகளை வெளியிடும் உரிமைகளையும் கொண்டிருந்தது.
பரீத்கோட் இராச்சியத்தின் ஆட்சியாளர்களின் பட்டியல்
[தொகு]குறிப்பு: பதவிக்காலம் முன்னதாகவும் வாழ்நாள் பிந்தையதாகவும் தரப்பட்டுள்ளன.
- சர்தார்
- இராசா
- மகாராசா
இதனையும் காண்க
[தொகு]உசாத்துணைகள்
[தொகு]- William Barton: The princes of India. Delhi 1983
- Andreas Birken: Philatelic Atlas of British India, CD-ROM, Hamburg 2004
- Imperial Gazetteer of India, 2. பதிப்பு 26 தொகுதி, ஆக்சுபோர்டு 1908–1931, இங்கே: [2]
- G. B. Malleson: An historical sketch of the native states of India. London 1875, Reprint Delhi 1984
- Subhash Parihar: Muslim Monuments in a Sikh State. In: Islamic Studies, Vol. 45, No. 2, Sommer 2006, S. 269–293
- Joseph E. Schwartzberg (Hrsg.): A historical atlas of South Asia. 2. Auflage, New York/Oxford 1992, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-506869-6