Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

சீத்தாராம் யெச்சூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீத்தாராம் யெச்சூரி
சீத்தாராம் யெச்சூரி கொல்லம், கேரளா 2011 கேரள சட்டமன்றத் தேர்தலின் போது
பொதுச் செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
பதவியில்
ஏப்ரல் 19, 2015 – செப்டம்பர் 12, 2024
முன்னையவர்பிரகாஷ் காரத்
நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை)
பதவியில்
ஆகஸ்ட் 22, 2005 – ஆகஸ்ட் 18, 2018
தொகுதிமேற்கு வங்கம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆகத்து 12, 1952 (1952-08-12) (அகவை 72)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு12 செப்டம்பர் 2024
நியூ தில்லி
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
முன்னாள் கல்லூரிதூட ஸ்டீபன் கல்லூரி, தில்லி,
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி, பொருளாதார வல்லுநர், எழுத்தாளர்
மூலம்: [1]

சீத்தாராம் யெச்சூரி (Sitaram Yechury, 12 ஆகத்து 1952 – 12 செப்டம்பர் 2024) இந்திய அரசியல்வாதியும் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளரும் [1] நாடாளுமன்ற குழுவின் தலைவரும் ஆவார்.[2]

இளமை

[தொகு]

யெச்சூரி 12 ஆகத்து 1952 அன்று சென்னையில் ஒரு தெலுங்கு குடும்பத்தில் பிறந்தார்.[3] இவரது தந்தை சர்வேசுவர சோமயாஜுலா யெச்சூரி மற்றும் தாயார் கல்பாகம். இவர்கள் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவரது தந்தை ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் பொறியியலாளராக இருந்தார். இவரது தாயார் அரசு அதிகாரி ஆவார்.[4] His mother was a government officer.[5]

யெச்சூரி ஐதராபாத்தில் வளர்ந்தார். மேலும் தனது பத்தாம் வகுப்பு வரை ஐதராபாத்தில் உள்ள அனைத்துப் புனிதர் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.[6] 1969ஆம் ஆண்டு தெலுங்கானா போராட்டம் காரணமாக இவர் தில்லிக்குக் குடிபெயர்ந்தார். புது தில்லியில் உள்ள பிரசிடெண்ட்ஸ் எஸ்டேட் பள்ளியில் சேர்ந்து, மத்திய இடைநிலைக் கல்வி வாரிய உயர்நிலைத் தேர்வில் அகில இந்திய அளவில் முதல் தரத்துடன் தேர்வு பெற்றார். [7] இதனைத் தொடர்ந்து, இளங்கலை பொருளியல் படிப்பினை தில்லியில் உள்ள தூய ஸ்டீபன் கல்லூரியிலும்[8] முதுநிலைப் பொருளாதாரப் படிப்பினை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் முடித்து முதல் வகுப்பில் தேர்ந்ச்சிப்பெற்றார். முனைவர் பட்டப்படிப்பிற்காக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் யெச்சூரி.[9] ஆனால் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு இவர் கைது செய்யப்பட்டதால் தொடர இயலவில்லை.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

1974ஆம் ஆண்டு‍ இந்திய மாணவர் சங்கத்தி்ல் உறுப்பினராகச் சேர்ந்தார். ஒரு‍ சில ஆண்டுகளுக்குப் பின் இந்தியப் பொதுவுடமைக் கட்சியில் (மார்க்சிஸ்ட்) இணைந்தார். யெச்சூரி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோதே 1975ஆம் ஆண்டு இந்திய நெருக்கடி நிலையின் போது கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு, அவசரநிலைக்கு எதிர்ப்பை ஏற்பாடு செய்து, சில காலம் மறைந்திருந்தார். அவசரநிலைக்குப் பிறகு, இவர் மூன்று (1977-78)[10]முறை சவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். யெச்சூரி, பிரகாசு காரத்துடன் இணைந்து இங்கு இடதுசாரிப் பிரிவை உருவாக்கினார்.[11]

திருமண வாழ்க்கை

[தொகு]

யெச்சூரி பத்திரிகையாளர் சீமா சிஸ்தியை மணந்தார். இவர் தி வயர் பத்திரிகையின் ஆசிரியராகவும், முன்பு பிபிசி இந்தி சேவையின் தில்லி ஆசிரியராகவும் இருந்தார்.[12] இந்தியன் எக்ஸ்பிரஸ், தில்லி தொகுப்பாசிரியராக இருந்தார். யெச்சூரி ஒரு ScoopWhoop நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவி நிதி ரீதியாக இவரை ஆதரிக்கிறார் என்று கூறினார்.[13] வினா மஜும்தாரின் மகள் இந்திராணி மஜும்தாரை இவர் முன்னதாக திருமணம் செய்து இருந்தார். இந்த திருமணத்தின் மூலம் இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.[14] இவரது மகள் அகிலா யெச்சூரி, வரலாற்றுப் பேராசிரியராக எடின்பர்க் பல்கலைக்கழகம் மற்றும் தூய ஆண்ட்ரூசு பல்கலைக்கழகத்தில் உள்ளார்.[5][15] இவரது மகன் ஆசிசு யெச்சூரி 22 ஏப்ரல் 2021 அன்று கோவிட்-19 தொற்றுக் காரணமாக 34 வயதில் இறந்தார்.[16] இவர் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் தலைமைச் செயலாளரான மோகன் காந்தா யெச்சூரியின் தாய் மாமா ஆவார்.[4]

இறப்பு

[தொகு]

சீத்தாரம் யெச்சூரி தனது 72வது அகவையில் உடல் நலக்குறைவால் புது தில்லியில் காலமானார்.[17][18]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://tamil.thehindu.com/india/மார்க்சிஸ்ட்-கட்சி-புதிய-பொதுச்-செயலாளராக-யெச்சூரி-தேர்வு/article7119104.ece?homepage=true
  2. http://cpim.org/leadership
  3. "Sitaram Yechury: Suave, Soft-Spoken and Dynamic". NDTV. 19 April 2015. http://www.ndtv.com/india-news/sitaram-yechury-suave-soft-spoken-and-dynamic-756280. 
  4. 4.0 4.1 "S.S. Yechury memorial office building opened" (in en-IN). The Hindu. 2011-07-24. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/ss-yechury-memorial-office-building-opened/article2291622.ece. 
  5. 5.0 5.1 Mukul, Akshaya (2015-04-20). "1969 Telangana agitation brought Sitaram Yechury to Delhi". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/1969-telangana-agitation-brought-sitaram-yechury-to-delhi/articleshow/46984164.cms. 
  6. Venkateshwarlu, K. (19 November 2005). "All Saints High School in select group". The Hindu இம் மூலத்தில் இருந்து 20 May 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100520231435/http://www.thehindu.com/2005/11/10/stories/2005111017220200.htm. 
  7. "Sitaram Yechury". 28 August 2009.
  8. "Detailed Profile - Shri Sitaram Yechury - Members of Parliament (Rajya Sabha) - Who's Who - Government: National Portal of India". india.gov.in.
  9. "Biography of Sitaram Yechuri". winentrance.com. 14 March 2011. Archived from the original on 16 July 2023. பார்க்கப்பட்ட நாள் 30 November 2014.
  10. "Sitaram Yechury - Communist Party of India". Communist Party of India. 28 August 2009. பார்க்கப்பட்ட நாள் 2019-09-20.
  11. Pillai, Sreedhar (1989-01-31). "13th party congress of CPI(M) in Trivandrum one of the most significant in its history". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-12.
  12. "Seema Chishti Joins The Wire as Editor". The Wire. 2 January 2023. https://thewire.in/media/seema-chishti-joins-the-wire-as-editor. 
  13. Off The Record Ep. 06 ft, Sitaram Yechury, General Secretary, CPI(M) (in ஆங்கிலம்), pp. 3:08, பார்க்கப்பட்ட நாள் 2021-12-26, Luckily my wife [financially] sustains me
  14. Mukul, Akshay (2010-06-23). "Vina Mazumdar, the fighter". The Times of India. https://timesofindia.indiatimes.com/life-style/people/Vina-Mazumdar-the-fighter/articleshow/6014253.cms. 
  15. "Dr Akhila Yechury: BA (Hons.), MA (Delhi), M.Phil (JNU), PhD (Cantab)". University of St. Andrews. பார்க்கப்பட்ட நாள் 21 April 2015.
  16. "Sitaram Yechury's son Ashish dies of Covid-19 in Gurugram hospital - Times of India" (in en). 22 April 2021. https://timesofindia.indiatimes.com/city/gurgaon/sitaram-yechurys-son-dies-of-covid-19-in-gurugram-hospital/articleshow/82191001.cms. 
  17. உடல் நலக்குறைவு காரணமாக சீதாராம் யெச்சூரி உயிரிழப்பு
  18. Sitaram Yechury, CPI(M) general secretary, passes away
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீத்தாராம்_யெச்சூரி&oldid=4090783" இலிருந்து மீள்விக்கப்பட்டது