Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

சேவியர் டேவிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேவியர் டேவிட் (பிறப்பு: மார்ச்சு 1 1933) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். கலைக்குமார், டியெக்ஸ், இரச்சகன், சிவத்தொண்டன் போன்ற புனைப்பெயர்களில் அறியப்பட்டவரான இவர், வர்த்தகராவார். மேலும், "பொன்னி" இதழில் துணையாசிரியராக இவர் பணியாற்றியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

[தொகு]

1956 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதைகள், கட்டுரைகள், ஆகியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. தமிழ் நாட்டில் அறிஞர் அண்ணாவின் "காஞ்சி" இதழில் இவரது கட்டுரை வந்தமை குறிப்பிடத்தக்கது.

பரிசில்களும், விருதுகளும்

[தொகு]
  • சிப்பாங் கலை இயக்கம் சிறந்த எழுத்தாளர் எனக் கௌரவித்துள்ளது.

உசாத்துணை

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சேவியர்_டேவிட்&oldid=3246435" இலிருந்து மீள்விக்கப்பட்டது