Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

சந்தா கோச்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தா கோச்சர்

சந்தா கோச்சர் (பிறப்பு 17 நவம்பர் 1961) இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி வங்கியின் மேலாண் இயக்குனரும் தலைமை நிர்வாக அலுவலரும் ஆவார். 2015 ஆம் ஆண்டுக்கான டைம் இதழின் 100 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் இவர் பெயரும் இடம்பெற்றது.[1] ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்புரில் பிறந்த இவர், மும்பையில் உள்ள ஜெய் ஹிந்த் கல்லூரியில் பட்டம் பெற்றார். மும்பையில் வசிக்கும் இவர், தீபக் கோச்சர் என்பவரை மணந்தார். இந்த தம்பதிக்கு ஆர்த்தி, அர்ஜுன் என இரு குழந்தைகள் உள்ளன. அமெரிக்காவின் பிரபல ஃபார்ச்சூன் இதழில், மற்ற உலக அளவிலான சிறந்த பெண் நிர்வாகி பட்டியலில் இவர் பெயர் அடிக்கடி இடம் பெறும்.[2] வங்கித்துறையில் சிறப்பாக பங்களித்ததற்காக, 2010 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கி சிறப்பித்தது[3]

வீடியோகான் கடன் முறைகேடு வழக்கில்

[தொகு]

வீடியோகான் நிறுவனத்துக்கு 3,250 கோடி ரூபாய் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கடன் வழங்கியதில் சாந்தா கோச்சார் மீது மோசடிக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. வீடியோகோன் நிறுவனம் வாங்கிய கடனில் ரூ.2,800 கோடிக்கு மேல் கடன் திருப்பிச் செலுத்தப்படாததால் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனத்தில் வீடியோகான் நிறுவனம் முதலீடு செய்திருந்தது தெரியவந்தது.

எனவே, வீடியோகான் நிறுவனத்தின் வராக் கடன் மோசடியில் சாந்தா கோச்சாருக்கும், அவரது கணவர் தீபக் கோச்சாருக்கும் தொடர்புள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டது.[4] எனவே ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி பதவியை விட்டு சந்தா கோச்சார் நீங்கியுள்ளார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தா_கோச்சர்&oldid=2888791" இலிருந்து மீள்விக்கப்பட்டது