கேப்பிட்டல் சினிமா
Appearance
கேப்பிட்டல் சினிமா Capitol Cinema | |
---|---|
கேப்பிட்டல் சினிமா | |
முகவரி | சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் எதிரில் |
நகரம் | மும்பை |
நாடு | இந்தியா |
ஆள்கூறுகள் | 18°56′22″N 72°50′04″E / 18.939343°N 72.834313°E |
திறப்பு | 1928 |
கேப்பிட்டல் சினிமா (Capitol Cinema (Mumbai)) இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் மும்பையில் உள்ள பழமையான திரையரங்குகளில் ஒன்றாகும். சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள இது குன்வர்ச்சி பாக்டிவாலாவால் கட்டப்பட்டது.[1] கேபிடல் சினிமா 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தரம் II விக்டோரியன் கட்டமைப்பில் 1879 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாரம்பரிய கட்டடமாகும். முதலில் டிவோலி என்று அழைக்கப்பட்ட கலை நிகழ்ச்சிகளுக்கான திரையரங்கமாகத் திகழ்ந்தது. 1928 ஆம் ஆண்டு ஒரு திரைப்பட அரங்காக மாற்றப்பட்டபோது இதன் தற்போதைய பெயரைப் பெற்றது.[2] கேப்பிட்டல் என மறுபெயரிடப்படுவதற்கு முன்பாக கெய்ட்டி திரையரங்கம் என்று அறியப்பட்டது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sangeet natak, Volume 36, Issue 1. Sangeet Natak Akademi.Page 13
- ↑ "Mumbai's oldest theatre may get a mall makeover". Indian Express. 7 May 2005 இம் மூலத்தில் இருந்து 16 May 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050516192632/http://cities.expressindia.com/fullstory.php?newsid=128140. பார்த்த நாள்: 12 April 2011.
- ↑ "Story of Mumbai's 140-Year-Old Capitol Cinema, A Marks of Architectural Heritage of the City". 7 November 2017.