காணம்
Appearance
குதிரைக்குக் காணம் காட்டல் என்னும் விளையாட்டில் காணம் என்னும் சொல் கொள் என்னும் முல்லைநிலப் பயறு வகையைக் குறிக்கும்.
காணம் என்பது சங்க கால நாணயத்தின் பெயர்
- ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தன்னைப் பாடிய புலவர் காக்கை பாடினியார் நச்செள்ளையாருக்கு ஒன்பது காப் பொன்னும் நூறாயிரம் காணமும் கொடுத்தான்.[1]
- செல்வக் கடுங்கோ வாழியாதன் தன்னைப் பாடிய புலவர் கபிலருக்கு நூறாயிரம் காணம் கொடுத்தது ‘சிறுபுறம்’ என்னும் பணக்கொடை.[2]
- பெருஞ்சேரல் இரும்பொறை தன்னைப் பாடிய புலவர் அரிசில் கிழார்க்கு ஒன்பது நூறாயிரம் காணம் கொடுத்தான்.[3]
- இளஞ்சேரல் இரும்பொறை தன்னைப் பாடிய புலவர் பெருங்குன்றூர் கிழார்க்கு முப்பத்தீராயிரம் காணம் கொடுத்தான்.[4]
- காணமே கணிகையர்க்குக் கண்.[5][6]
- ஆதிரை என்பவளின் கணவன் சாதுவன் கணிகையோடு வாழ்ந்தபோது காணம் இல்லாததால் அவனைக் கைவிட்டாள்.[7]
- மணிமேகலை தன்னைத் தழுவினாள் என்று பொய் சொல்வதற்கு உதயகுமரனின் தாய் வஞ்சகன் ஒருவனுக்கு காணத்தைக் கையுறையாக (கையூட்டாக) நல்கினாள்.[8]
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ பதிற்றுப்பத்து, பதிகம் 6,
- ↑ பதிற்றுப்பத்து, பதிகம் 7,
- ↑ பதிற்றுப்பத்து, பதிகம் 8,
- ↑ பதிற்றுப்பத்து, பதிகம் 9
- ↑ செங்கோட்டின் மேற்காணம் இன்மையான் மேவாது ஒழிந்தாளே நாலடியார் 372,
- ↑ ஆணமில் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்க்குக் காணமி லாதார் கடுவனையர் நாலடியார் 374
- ↑ காணம் இலி எனக் கையுதிர் கோடலும் - மணிமேகலை 16-10,
- ↑ மணிமேகலை 23-48, 54