அமராபுரா
அமராபுரா
အမရပူရ မြို့နယ် | |
---|---|
மண்தாலே பிரதேசத்தின் ஒரு நகரம் | |
அமராபுரா நகரம் | |
ஆள்கூறுகள்: 21°54′N 96°03′E / 21.900°N 96.050°E | |
நாடு | மியான்மர் |
மாநிலம் | மண்தாலே |
நகரம் | மண்டலை |
நகரம் | அமராபுரா |
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு | 13 மே 1783 |
நேர வலயம் | ஒசநே6:30 (MST) |
இடக் குறியீடு(கள்) | 2 (mobile: 69, 90)[1]தொலைபேசிக் குறியீடு |
அமராபுரா மியான்மரின் மண்தாலே மாநிலத்தில் உள்ள ஒரு பண்டைய நகரம். அது மட்டுமல்லாமல் இந்நகரம் மியான்மரின் முன்னாள் தலைநகரமாகவும் செயல்பட்டிருக்கிறது தற்போது மண்தாலே பிரதேசத்தில் ஒரு நகரமாக இருக்கிறது. அமராபுராவின் மேற்கில் இர்ரவாடி ஆறும், சென்மைதாஸி நகரம் வடக்கிலும் மற்றும் தெற்கில் பண்டைய மியான்மரின் தலைநகரமாக இருந்த அவா (இன்வா) நகரம் சூழ்ந்துள்ளது. மன்னர் கோன்பாங் ஆட்சிக் காலத்தில் (1783-1821 மற்றும் 1842-1859 ஆண்டுகளில்) அமராபுரா இரண்டு முறை மியான்மரின் தலைநகராக இருந்தது. பின்னாளில் 1859 ஆண்டில் வடக்கில் 11 கிமீ தொலைவில் மண்டலை நகரத்திற்கு தலைநகரம் மாற்றப்பட்டது. இது வரலாற்று ரீதியாக தாங்மயோ (தெற்கு நகரம்) என அழைக்கப்படுகிறது. நகர்ப்புற விரிவாக்கத்தின் விளைவாக இன்று மண்டலையின் ஒரு பகுதியாக அமராபுரா உள்ளது.
இந்நகரம் பாரம்பரிய பட்டு மற்றும் பருத்தி நெசவு மற்றும் வெண்கல வார்பு வேலைகளுக்காக இன்றும் அறியப்படுகிறது. இது மண்டதலேயில் இருக்கும் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக பயணிகள் தினசரி பயணமாகும் இடமாக உள்ளது.
வரலாறு
[தொகு]அமராபுரா நகரம் கோன்பாங் வம்சத்தை சார்ந்த மன்னர் போதவபாயாவால் உருவாக்கப்பட்டது. மே 1783 ஆம் ஆண்டில் அவர் தனது புதிய தலைநகரமாக அமராபுராவை நிறுவினார்.[2] புதிய தலைநகரம் பௌத்த சீர்திருத்தங்கள் மற்றும் கற்றல் மையமாக மாறியது. 1800 ஆம் ஆண்டில் இலங்கையில் இருந்த வந்த பௌத்த பிட்சுக்கள் இந்த நகரத்தில் உயர் பதவிகளைப் பெற்றனர் மற்றும் அமராபுர நிகாயா (அமராபுரா பிரிவு) ஆரம்பித்தனர்.[3]
1810 ஆம் ஆண்டில் மக்கள் தொகை 170,000 கொண்டிருந்ததாக மதிப்பிடப்பட்டிருந்தது, ஆனால் இந்த நகரம் அதே ஆண்டில் தீயினால் அழிக்கப்பட்டது.[4] மன்னர் போதவபாயாவின் பேரன் மன்னர் பாகிதாவ நவம்பர் 1821 ஆம் ஆண்டில் நீதிமன்றம் மற்றும் தலைநகரை அவா நகரத்திற்கு மாற்றினார்.[5] 1827 ஆம் ஆண்டுவாக்கில் அமராபுரா மக்கள் தொகை 30,000 மாக குறைந்ததாக மதிப்பிடப்பட்டள்ளது.[4] மன்னர் பாகிதாவின் அடுத்த வாரிசான மன்னர் தாரவாடி, பிப்ரவரி 1842 ஆம் ஆண்டில் தலைநகரை மீண்டும் அமராபுராவிற்கு மாற்றினார்.[6] 1857 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதவாக்கில் மன்னர் மின்டான், அமராபராவிற்கு வடக்கில் சுமார் 11கிமீ தொலைவில் புதிய தலைநகரமாக மண்டலை நகரை கட்டமைக்க தொடங்கினார். 1852 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் ஆங்கில-பர்மிய போரில் மன்னரின் அரச கருவூலத்தில் செல்வங்கள் பெருமளவு குறைத்துவிட்டது, இதன் காரண்மாக மன்னர் மின்டான் மண்டலை நகரின் கட்டுமான செலவை ஈடுகட்ட முடிந்தளவு அமராபுரத்திலிருந்தே அதிகமான பொருட்களை எடுத்து மீண்டும் பயன்படுத்த முடிவு செய்தார். அமராபுரா அரண்மனை கட்டடங்கள் இடிக்கப்பட்டு பொருட்கள் அகற்றப்பட்டு யானைகளால் புதிய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சாலைகள் மற்றும் இரயில் பாதைகளுக்கான கட்டிடப் பொருட்களைப் பயன்படுத்துவதற்காக நகரின் சுவர்கள் இடிக்கப்பட்டு அதன் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது.[7] பாகயா மடாலயத்திற்கு அருகே இப்போதும் ஒரு அகழி இருப்பது இன்றும் அறியப்படுகிறது. 1859 ஆம் ஆண்டு மே மாதம் மண்டலை நகரம் புதிய தலைநகரமாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, பழைய நகரத்தின் செயல்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டது.[8]
அமராபுரா நகரின் இடிபாடுகளை பார்க்குப் போது நகரின் மதில் சுவர் நான்கில் மூன்று பங்கு மைல் நீளம் கொண்டதாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு மூலையிலும் சுமார் 100 அடி உயரமுடைய ஒரு திட செங்கலால் கட்டப்பட்ட தூபி இருந்தது. நகரின் மிகவும் குறிப்பிடத்தக்க கட்டிடம் ஒரு பிரபலமான கோவில் ஆகும். இங்கு 250 உயரமான மர தூண்கள் கொண்டு அழ்குபடுத்தப்பட்டிருந்தது மற்றும் புத்தரின் ஒரு பெரிய வெண்கலச் சிலையும் அந்தக் கோவிலில் வைத்திருந்தனர்.[4]
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Myanmar Area Codes". Archived from the original on 2009-12-01. பார்க்கப்பட்ட நாள் 2017-11-29.
- ↑ Maung Maung Tin Vol. 1 1905: 395
- ↑ Bischoff 1995: 113
- ↑ 4.0 4.1 4.2 ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள் தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Amarapura". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 1. (1911). Cambridge University Press.
- ↑ Maung Maung Tin Vol. 2 1905: 223
- ↑ Maung Maung Tin Vol. 3 1905: 33
- ↑ Cooler, Konbaung Amarapura
- ↑ Maung Maung Tin Vol. 3 1905: 193