இலித்தியம் பெர்குளோரேட்டு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் பெர்குளோரேட்டு
| |
வேறு பெயர்கள்
பெர்குளோரிக் அமிலம், இலித்தியம் உப்பு; இலித்தியம் குளோரிக்கம்
| |
இனங்காட்டிகள் | |
7791-03-9 | |
ChemSpider | 133514 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 23665649 |
| |
UNII | Q86SE98C9C |
பண்புகள் | |
LiClO 4 | |
தோற்றம் | வெண்மையான படிகங்கள் |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 2.42 கி/செ.மீ3 |
உருகுநிலை | 236 °C (457 °F; 509 K) |
கொதிநிலை | 430 °C (806 °F; 703 K) 400 °செல்சியசிலிருந்து சிதைவடையும் |
42.7 கி/100 மி.லி (0 °செ) 49 கி/100 மி.லி (10 °செ) 59.8 கி/100 மி.லி (25 °செ) 71.8 கி/100 மி.லி (40 °செ) 119.5 கி/100 மி.லி (80 °செ) 300 கி/100 மி.லி (120 °செ)[1] | |
கரைதிறன் | ஆல்ககால், எத்தில் அசிட்டேட்டு[1] போன்றவற்றில் கரையும் |
acetone-இல் கரைதிறன் | 137 கி/100 கி[1] |
ஆல்ககால்-இல் கரைதிறன் | 1.82 கி/கி (0 °செல்சியசில், in CH3OH) 1.52 கி/கி (0 °செ, C2H5OH) 1.05 கி/கி (25 °செ, C3H7OH) 0.793 கி/கி (0 °செ, C4H9OH)[1] |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-380.99 யூ/மோல் |
நியம மோலார் எந்திரோப்பி S |
125.5 யூ/மோல்•கெல்வின் [1] |
வெப்பக் கொண்மை, C | 105 யூ/மோல்•கெல்வின்[1] |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | ஆக்சிசனேற்றி, எரிச்சலூட்டும் |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | MSDS |
GHS pictograms | [2] |
GHS signal word | அபாயம் |
H272, H315, H319, H335[2] | |
P220, P261, P305+351+338[2] | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இலித்தியம் குளோரைடு இலித்தியம் ஐப்போகுளோரைட்டு இலித்தியம் குளோரேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் பெர்குளோரேட்டு பொட்டாசியம் பெர்குளோரேட்டு ருபீடியம் பெர்குளோரேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இலித்தியம் பெர்குளோரேட்டு (Lithium perchlorate) என்பது LiClO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மையாகவோ அல்லது நிறமற்றோ படிக உப்பாகக் காணப்படும் இச்சேர்மம் பல கரைப்பான்களில் கரையக்கூடிய தன்மையைப் பெற்றிருப்பதால் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. நீரிலியாகவும் முந்நீரேற்றாகவும் இது இயற்கையில் காணப்படுகிறது.
பயன்பாடுகள்
[தொகு]கனிம வேதியியல்
[தொகு]வேதி ஆக்சிசன் மின்னாக்கிகள் சிலவற்றில் ஆக்சிசன் மூலமாக இலித்தியம் பெர்குளோரேட்டு பயன்படுகிறது. இலித்தியம் பெர்குளோரேட்டு 400 °செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைந்து இலித்தியம் குளோரைடையும் ஆக்சிசனையும் கொடுக்கிறது :[3]
- LiClO4 → LiCl + 2 O2.
இலித்தியம் பெர்குளோரேட்டின் நிறையில் கிட்டத்தட்ட 60 சதவீதம் ஆக்சிசனாக வெளியேற்றப்படுகிறது. நடைமுறையில் பயன்படும் எல்லா பெர்குளோரேட்டு உப்புகளைக் காட்டிலும் ஆக்சிசன், நிறை மற்றும் ஆக்சிசன், கன அளவு இரண்டிலும் இப்பெர்குளோரேட்டு மட்டுமே அதிக விகித மதிப்பைக் கொண்டுள்ளது.
கரிம வேதியியல்
[தொகு]டை எத்தில் ஈதர் உட்பட பெரும்பாலான கரிமக் கரைப்பான்களில் LiClO4 நன்றாகக் கரைகின்றது. இக்கரைசல்கள் டையீல்சு ஆல்டர் வினைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு இச்சேர்மம் டையீனோபில்களின் மீதுள்ள இலூயிசு கார தலங்களுடன் இலூயிசு அமில Li+ ஆகப் பிணைந்து வினையை முடுக்கிவிடுகிறது [4].
α,β-நிரைவுறா கார்பனைல்கள் ஆல்டிகைடுகளுடன் வினைபுரியும்போது ஓர் இணை வினையூக்கியாகவும் இலித்தியம் பெர்குளோரேட்டு பயன்படுகிறது. இவ்வினை பேலிசு-இல்மேன் வினை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது [5].
மின்கலங்களில்
[தொகு]இலித்தியம் பெர்குளோரேட்டு சேர்மம் இலித்தியம்-அயனி மின்கலன்களில் மின்பகுளியாகப் பயன்படுத்தப்படுகிறது. இலித்தியம் எக்சாபுளோரோ பாசுபேட்டு அல்லது இலித்தியம் டெட்ராபுளோரோபோரேட்டு போன்ற மின்பகுளிகளுக்கு மாற்றாக இலித்தியம் பெர்குளோரேட்டு தெரிவு செய்யப்படுகிறது. ஏனென்றால் மேம்பட்ட மின் தடுப்பு, கடத்துதிறன், நீர்நாட்டப் பண்பு மற்றும் நேர்முனை நிலைப்புத்தன்மை போன்ற பண்புகள் குறிப்பிட்ட பயன்பாடுகளுக்காக சிறப்புத்தன்மையை கொண்டிருக்கிறது [6] இருப்பினும் இந்த நன்மைகள் யாவும் இம்மின்பகுளியின் வலுவான ஆக்சிசனேற்றும் பண்புகளால் திசைதிருப்பப்படுகின்றன, இதனால் அதிக வெப்பநிலை அல்லது உயர் மின்னோட்ட வலிமைகளில் அதன் கரைப்பானுடன் அதிஅக் வினை புரியும் தன்மையைப் பெறுகின்றன. இந்த ஆபத்துகளால் இம்மின்கலம் பொதுவாக தொழில்துறை பயன்பாடுகளுக்கு தகுதியற்றதாக கருதப்படுகிறது [6].
உயிர் வேதியியல்
[தொகு]இலித்தியம் பெர்குளோரேட்டு சேர்மத்தின் அடர்த்தியான கரைசல்கள் (4.5 மோல்/ லிட்டர்) புரதங்களின் இயல்பு திரிதலுக்கு உதவும் முகவராக பயனாகிறது.
உற்பத்தி
[தொகு]சோடியம் பெர்குளோரேட்டுடன் இலித்தியம் குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து இலித்தியம் பெர்குளோரேட்டு பேரளவில் தயாரிக்கப்படுகிறது. இலித்தியம் குளோரேட்டை 20 பாகை செல்சியசுக்கு மேற்பட்ட வெப்பநிலையில் மின்னாற்பகுப்புக்கு உட்படுத்தியும் தயாரிக்கிறார்கள்[7].
பாதுகாப்பு
[தொகு]பெர்குளோரேட்டுகள் பெரும்பாலும் கரிமச் சேர்மங்களுடன் சேர்க்கப்படும்போது வெடிக்கும் கலவைகளாக மாறுகின்றன[7].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 http://chemister.ru/Database/properties-en.php?dbid=1&id=612
- ↑ 2.0 2.1 2.2 Sigma-Aldrich Co., Lithium perchlorate. Retrieved on 2014-05-09.
- ↑ M. M. Markowitz, D. A. Boryta, and Harvey Stewart, Jr. (1964). "Lithium Perchlorate Oxygen Candle. Pyrochemical Source of Pure Oxygen". Ind. Eng. Chem. Prod. Res. Dev. 3: 321–330. doi:10.1021/i360012a016.
- ↑ Charette, A. B. "Lithium Perchlorate" in Encyclopedia of Reagents for Organic Synthesis (Ed: L. Paquette) 2004, J. Wiley & Sons, New York. எஆசு:10.1002/047084289.
- ↑ [1] Lithium Perchlorate Product Detail Page
- ↑ 6.0 6.1 Xu, Kang (2004). "Nonaqueous liquid electrolytes for lithium-based rechargeable batteries". Chemical Reviews 104 (10): 4303-4417. doi:10.1021/cr030203g. பப்மெட்:15669157. http://is.muni.cz/el/1431/podzim2006/C7780/um/Read/2659326/LiON_ellytes_ChRev04_4303.pdf. பார்த்த நாள்: 24 February 2014.
- ↑ 7.0 7.1 Helmut Vogt, Jan Balej, John E. Bennett, Peter Wintzer, Saeed Akbar Sheikh, Patrizio Gallone "Chlorine Oxides and Chlorine Oxygen Acids" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH. எஆசு:10.1002/14356007.a06_483