பதினெட்டாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)
குருச்சேத்திரப் போரின் இறுதி நாள் யுத்தம், கௌரவர்களின் கடைசி தளபதி சல்லியனை கொன்றது, 99 கௌரவர்களை கொன்றது,திரௌபதியின் சாபம் நிறைவேறியது,பாண்டவர்களின் சபதங்கள் நிறைவேறியது, பாண்டவர்களால் கொல்லாமல் விடப்பட்ட துரியோதனனின் நிலை குறித்து விரிவாகக் கூறுகிறது. இதனை சல்ய பருவம் என வில்லிப்புத்தூரார் வில்லிபாரதத்தில் பதிவு செய்துள்ளார்.[1]
சல்லியன்
தொகுமாதுரியின் சகோதரன்,பாண்டவர்களில் பின்னிருவர் நகுலன்,சகாதேவன் இருவரின் தாய் மாமன் கௌரவர் படையுடன் சேர்ந்து போர் செய்தது துரியோதனனின் தந்திரமான ஏற்பாடு,அதாவது குருச்சேத்திரப் போரில் பாண்டவர் பக்கம் போரிட பெரும்படையுடன் வந்த சல்லியனை இடையிலேயே இளைப்பாற்றிட வேண்டிய ஏற்பாடுகளை துரியோதனன் செய்திருந்தான், இதை அறியாத சல்லியன் உண்டு களைப்பாறிய பின் சல்லியனுக்கு இது தெரிவிக்கப்பட்டது. தனது தவறு தெரிந்து சல்லியன் மிகுந்த வேதனையடைந்து "உண்ட வீட்டிற்கு இரண்டகம் (துரோகம்) செய்வதில்லை" என கௌரவர் பக்கம் நின்று போரிட்டான். உரிய மதிப்பு வழங்கப்படாமல் அவமானப் படுத்தப்பட்டான், கர்ணனுக்கு தேரோட்டியாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தப் பட்டான். எந்த எதிர்ப்பும் இல்லாமல் அந்தப்பணியை செய்ததால் பாண்டவர்களிடத்திலும்,கௌரவர்களிடத்திலும் மதிப்பைப் பெற்றான். இறுதி நாளில் கௌரவப்படைக்கு தலைமையை கனத்த மனத்துடன் ஏற்றுக்கொண்டான். பாண்டவரில் தன் சகோதரியின் மகன்கள் என்றாலும் தன் சொந்த உணர்வுகளுக்கு இடமில்லை என உறுதியளித்தான்.[2]
கிருட்டிணன் சதி
தொகுஅருச்சுனனிடம் கிருட்டிணன் "யுதிஷ்டிரன் சல்லியனுடன் தனியாகப் போரிட்டே ஆக வேண்டும்" என்றார். அருச்சுனன் "ஏன்?" என்றான், ஆனால் கிருட்டிணன் அதற்கு பதில் சொல்லவில்லை. அவனது உடலுக்குள் ஒரு பெரிய அசுரன் இருக்கிறான், யாராவது அவனை எதிர்த்தால் அவனது சக்தி பல்கி பெருகிக்கொண்டே போகும்,எதிர்ப்பவன் எவ்வளவு பலசாலியோ அத்தனை பலசாலியாக சல்லியனுக்குள் இருக்கும் அசுரனின் பலம் அதிகரிக்கும். யுதிஷ்டிரன் அவ்வளவு ஆவேசமாக போர் புரிபவர் அல்ல அதிலும் குறிப்பாக (சல்லியனுடன் போரிடும்போது அதாவது தனது தந்தை பாண்டுவின் மைத்துனன்,தனது சகோதரர்களின் தாய்மாமன் என்ற உணர்வில் கோபப் படாமல்) சல்லியனை பலமிழக்கச் செய்து கொல்ல வேண்டும்.[2]
சல்லியன் மரணம்
தொகுபோரின் கடைசி நாள் கௌரவப் படைத்தளபதி சல்லியனின் முன் போய் நின்றார்,சல்லியனை ஆவேசத்துடன் நெருங்காமல், அன்புடன் நெறுங்கினார், [யுதிஷ்டிரன்|யுதிஷ்டிரனின்]] கருணை நிரைந்த பார்வையால் அசுரனின் பலம் பெருகுவதற்கு பதில் குறைந்து கொண்டே வந்தது. இறுதியில் அசுரன் பலம் முழுவதும் போய் அசுரன் மறைந்தே போனான்,சல்லியனும், யுதிஷ்டிரனும் நேருக்கு நேர் நின்றார்கள், தருமன் ஒரு வேலை எடுத்து எந்த கொபமோ,வெறுப்போ இன்றி சல்லியன் மீது எறிந்தார்,சல்லியன் சரிந்து விழுந்து இறந்தான்.கௌரவர்களின் கடைசித் தளபதியும் இறந்த பின் வெற்றியை பாண்டவர்களுக்கு எளிதாக்கியது.
சகுனி மரணம்
தொகுதோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்த சகுனி தனது காந்தாரப் படையுடன் பாண்டவர்களின் படையை பின்புறமிருந்து தாக்கினான். படையின் பின்புறம் என்ன ரகளை என குந்தியின் மக்கள் திரும்பிப் பார்த்தனர்,சகுனி தனது படையுடன் பின்புறம் தாக்குவது கண்டு பின்புறப் படைகளை காக்க அங்கே போவது முடியாதது. எனவே படையின் கடைசியிலிருந்த மாதுரியின் மக்களான நகுலன், சகாதேவனிடம்,"சகோதரர்களே இறந்த உங்கள் தாய் மாமனுக்காக நீங்கள் வருந்துவது எனக்கு தெரிகிறது, அங்கே பாருங்கள் கொடுமதி படைத்த சகுனி கோழைத்தனமாக பின்னால் இருந்து,தந்திர நரி மாதிரி செயல்படுவதை அவனை கொல்லாமல் விட்டால் இத்தனை வெற்றிகளும் ஒன்றுமே இல்லாமல் போய்விடும்,உங்கள் மாமன் இறப்பிற்கு பழிக்கு பழி அவனை கொல்லுங்கள்" என்றார். நகுலனும்,சகாதேவனும் தனது வாளுடன் சகுனி மீது பாய்ந்து மூர்க்கமாக சண்டையிட்டு சகுனியை கொன்றனர். தன் மாமன் அப்பாவி அவரைத் தந்திரமாக எதிரிகளுடன் சேர்ந்து போரிட வைத்து விட்டார்கள். ஆனால் சகுனி அப்பாவியல்ல பதினான்கு வருடங்களுக்கு முன் அவர்களது இராச்சியத்தை இழக்க தந்திரமாக சூதாடியவன்.[2]
கௌரவர் மாண்டனர்
தொகுசூதாட்டத்தின் போது கௌரவர்களை "கொல்வேன்" என பீமன்சபதம் செய்த படியே, ஒவ்வொரு நாளும் ஒரு சிலரைக் கொன்று வந்தான். கௌரவர்களின் எண்ணிக்கைக் குறையக் குறைய காந்தாரி தன் மக்களிடம் போரில் பீமனைத் தவிர்க்கச் சொன்னாள், ஆனால், பீமனோ தேருக்குப் பின்னும், யானைகளுக்குப் பின்னும் ஒளிந்த கௌரவர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்கள் கெஞ்சக் கெஞ்ச,தனது கதாயுதத்தால் தலையை பிளந்து கொன்றான். பீமனின் சபதம் நிறைவேற வேண்டும் என்பதற்காக மற்ற பாண்டவர்கள் வாய்ப்புக் கிடைத்தும் அதைத் தவிர்த்தார்கள். விகர்ணனைக் கொல்ல பீமன் கொஞ்சம் தயங்கினான், கௌரவர்களில் அவன் மட்டும் தான் துரியோதனனுடன் இசைந்து போகாதவன்,சூதாட்டத்தின் போதும், திரௌபதி துகில் உரியப் பட்ட போதும் எதிர்த்தவன், ஆனால் போரிடும் போது விகர்ணன் விசுவாசத்தோடு தனது சகோதரர்களோடு,சேர்ந்து போரிட்டான். விகர்ணன் மாண்டபோது பாண்டவர் அத்துனைபேரும் அழுதனர். பிறகு துச்சாதனனை கீழே தரையில் தள்ளி தன் கரங்களால் அவனது குடலை உருவினான், திரௌபதியின் சபதத்தை நிறைவேற்ற அவளை அழைத்து துச்சாதனனின் ரத்தத்தை அவளது கூந்தலில் தோய்க்கச் சொன்னான். அவ்வாறே செய்தவள் துச்சாதனனின் இதயத்தை எடுத்து கூந்தலில் பூவைப்போல சூடிக்கொண்டாள்.[2]