தோமசு கோக்
தோமசு கோக் (Thomas Coke, 9 செப்டம்பர் 1747 – 2 மே 1814) என்பவர் முதலாவது மெதடிச ஆயரும்[1] மெதடிச இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படுபவரும் ஆவார்.
தோமசு கோக் Thomas Coke | |
---|---|
ஆயர் கோக் | |
மெதடிச மாநாட்டின் தலைவர் | |
பதவியில் 1797–1798 | |
முன்னையவர் | தோமசு டெய்லர் |
பின்னவர் | யோசப் பென்சன் |
பதவியில் 1805–1806 | |
முன்னையவர் | என்றி மூர் |
பின்னவர் | ஆடம் கிளார்க் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிரெக்கன், தெற்கு வேல்சு | 9 செப்டம்பர் 1747
இறப்பு | மே 2, 1814 | (அகவை 66)
வேலை | மெதடிச ஆயர் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஐக்கிய இராச்சியம், வேல்சில் பெபிரெக்கோன் நகரத்தில் பிறந்தவர் தோமசு கோக். இவரது தந்தை பர்தலோமியூ ஒரு பிரபலமான மருந்து வணிகர் ஆவார். 5 அடி 1 அங். உயரமுடைய கோக் ஆக்சுபோர்டு இயேசு கல்லூரியில் பயின்று இளங்கலை, முதுகலை (1770), மற்றும் குடியியல் சட்டத்தில் முனைவர் (1775) பட்டமும் பெற்றார். பின்னர் பிரெக்கோன் திரும்பி நகர முதல்வராகப் பணியாற்றினார்.
திருநிலை
தொகு1772 இல் இங்கிலாந்து திருச்சபையில் திருநிலைப்படுத்தப்பட்டார். சோமர்செட் நகரில் துணைநிலை போதகராகப் பணியாற்றினார். அதே வேளையில் மெதடிச இயக்கத்தில் இவர் ஈடுபாடு கொண்டார். 1977 இல் உயிர்ப்பு ஞாயிறு அன்று பதவியில் இருந்து அகற்றப்பட்டார். 1807 இல் பெதர்ட்டன் நகர் வந்து அங்கு 2000 இற்கும் அதிகமானோர் கூடியிருந்த கூட்டத்தில் அறவுரை ஆற்றினார். 1776 ஆகத்து மாதத்தில் மெதடிச நிறுவனர் யோன் உவெசுலியைச் சந்தித்தார். 1780 இல் இலண்டன் மாவட்டத்துக்கான ஆயராக நியமிக்கப்பட்டார். 1782 இல் அயர்லாந்து மெதடிசத் திருச்சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[2]
அமெரிக்கா பயணம்
தொகுஅமெரிக்கப் புரட்சியை அடுத்து, பெரும்பான்மையான ஆங்கிலிக்க சமயக்குருக்கள் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்து திரும்பினர். கோக் நியூயோர்க் நகரை நோக்கிப் புறப்பட்டார். 1784 கிறித்துமசு நாளில் பால்ட்டிமோரில் மெதடிச சொற்பொழிவாளர்களின் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் திருச்சபை மெதடிச மேற்றிராணியார் திருச்சபை என்ற பெயரில் தனித் திருச்சபையாக அறிவிக்கப்பட்டது. கோக், பிரான்சிசு ஆசுபரி ஆகியோர் அமெரிக்க மெதடிசத் திருச்சபையின் முதலாவது ஆயர்களாக நியமிக்கப்பட்டனர்.
ஏனைய பயணங்கள்
தொகுகோக் 1785 சூனில் இங்கிலாந்து திரும்பினார். 1803 ஆம் ஆண்டுக்கிடையில் இவர் எட்டு முறை அமெரிக்கா சென்று திரும்பினார். அமெரிக்காவில் தங்கியிருந்த போது அமெரிக்க நாடுகளில் அடிமை முறைக்கு எதிராகக் குரல் எழுப்பினார். அரசுத்தலைவர் சியார்ச் வாசிங்டனுக்கு இது குறித்துக் கடிதம் எழுதினார். வாசிங்டன் கோக்கை இரண்டு தடவைகள் சந்தித்துள்ளார். சட்டமன்றத்தில் சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டார். 1786 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு முதன் முறையாக சென்றார். பின்னர் 1788-89, 1790, 1792-93 காலப்பகுதிகளில் அத்தீவுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.
வெசுலியின் மறைவு
தொகு1791 இல் யோன் உவெசுலி இறந்த பின்னர் இடம்பெற்ற பிரித்தானிய மாநாட்டில் கோக் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1787, 1805 மாநாடுகளிலும் இவர் செயலாளராகப் பணியாற்றினார். 1803 இல் ஜிப்ரால்ட்டர் சென்றார். மெதடிசப் பணிகளுக்காக சியேரா லியோனி, கனடா ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார்.
திருமணம்
தொகு1805 ஏப்ரலில், தனது 58வது அகவையில், பெனிலோப் சிமித் என்பவரைத் திருமணம் புரிந்தார். பெனிலோப் இவருடன் மெதடிசப் பணிகளுக்காகப் பல நாடுகளுக்குச் சென்றுள்ளார். பெனிலோப் 1811 சனவரில் இறந்ததை அடுத்து அதே ஆண்டு டிசம்பரில், ஆன் லாக்சுடேல் என்பவரைத் திருமணம் புரிந்தார். ஆன் அடுத்த ஆண்டு 1812 சனவரியில் காலமானார்.[5]
கோக் இறப்பு
தொகுகிழக்கிந்தியத் தீவுகளில் மெதடிச இயக்கத்தைப் பரப்பும் முகமாக கோக் தனது சொந்தச் செலவில் 1813 டிசம்பர் 30 இல் இலங்கை நோக்கிப் புறப்பட்டார். ஆனாலும், கோக் இலங்கை செல்லும் வழியில் கப்பலிலேயே இந்தியப் பெருங்கடலில் இறந்தார்.[6] இவர் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு இறந்ததாக நம்பப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1911 Encyclopædia Britannica, entry "Thomas Coke"
- ↑ Vickers, John A. (2013) Thomas Coke: Apostle of Methodism. Wipf and Stock Publishers.
- ↑ "The house in which Dr. Coke commenced the Jamaica Mission". The Wesleyan Juvenile Offering: A Miscellany of Missionary Information for Young Persons (Wesleyan Missionary Society) IX: 55. May 1852. https://archive.org/download/wesleyanjuvenil08socigoog/wesleyanjuvenil08socigoog.pdf. பார்த்த நாள்: 24 February 2016.
- ↑ "Coke Chapel, Kingston, Jamaica". The Wesleyan Juvenile Offering: A Miscellany of Missionary Information for Young Persons (Wesleyan Missionary Society) IX: 42. April 1852. https://archive.org/download/wesleyanjuvenil08socigoog/wesleyanjuvenil08socigoog.pdf. பார்த்த நாள்: 24 February 2016.
- ↑ "Adventures of Asbury" by Eric Jennings, The Historical Trail 1997: Yearbook of Conference Historical Society and Commission on Archives and History, Southern New Jersey Conference, The United Methodist Church (issue 34, 1997), p. 31 footnote 43
- ↑ "Thomas Coke". The Columbia Encyclopedia, Sixth Edition. (2007). Columbia University Press.
வெளி இணைப்புகள்
தொகு- General Commission on Archives and History for The United Methodist Church
- The John Rylands Library: Mr Wesley's Preachers பரணிடப்பட்டது 2006-03-17 at the வந்தவழி இயந்திரம்
- Dr Victor Shepherd (2001). "Chapter 33: Thomas Coke (1747 - 1814)". Witnesses to the Word. Toronto: Clements Pub. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-894667-00-X. Archived from the original on 5 பெப்பிரவரி 2007.
{{cite book}}
: Unknown parameter|chapterurl=
ignored (help); Unknown parameter|deadurl=
ignored (help) - 1911 Encyclopedia
- The Life of the Rev. Thomas Coke, LL. D Samuel Drew 1817
- Southwestern University chapel windows பரணிடப்பட்டது 2017-03-29 at the வந்தவழி இயந்திரம்
- Vickers, John A., ed. 2016. The Letters of Dr. Thomas Coke. Nashville, TN: Abingdon Press.