ரிசபநாதர்
ரிசபநாதர் | |
---|---|
முதல் தீர்த்தங்கரர் | |
விவரங்கள் | |
வேறு பெயர் | ஆதிநாதர் |
வரலாற்று காலத்திற்கு முந்தியவர் | |
குடும்பம் | |
தந்தை | நபிராஜா |
தாய் | மருதேவி |
அரச குலம் | இச்வாகு குலம் |
"எருது" | |
இடங்கள் | |
பிறந்த இடம் | அயோத்தி |
முக்தி பெற்ற இடம் | அஷ்டபாதம், கயிலை மலை |
ரிசபநாதர் அல்லது ரிசபதேவர் அல்லது ஆதிநாதர் (Rishabha or Adinatha) சமண சமயத்தை நிறுவியர். 24 சமண சமய தீர்த்தாங்கரர்களில் முதலாமவர். 'தீர்த்தங்கரர்’ என்பதற்குத் ‘தம் ஆன்மாவைப் பிறவிக்கடலிலிருந்து கரையேற்றிக் கொண்டவர்’ என்பது பொருள்.[1] இச்வாகு அரச குலத்தில் கோசல நாட்டு மன்னர் நபிராஜா–மருதேவி தம்பதியர்க்கு அயோத்தில் பிறந்தவர்.[2] கோசல நாட்டின் ரிஷபர் என்றும் அழைக்கப்பட்டவர். ரிஷபதேவரின் மூத்த மகன் பரதன் பெயரில், இந்தியா நாட்டை பாரதவர்சம் என்றும் பரத கண்டம் என்று அறியப்பட்டது..
பண்டைய வரலாறு
[தொகு]ரிஷபதேவருக்கு சுனந்தா மற்றும் சுமங்களா என இரண்டு மனைவிகள். சுனந்தாவிற்கு பாகுபலி மற்றும் சுந்தரி என இரண்டு மக்கள் பிறந்தனர். சுமங்களாவிற்கு பரதன் மற்றும் பிராமி என்ற இரண்டு மக்கள் பிறந்தனர். இதில் பரதன் ரிஷபதேவரின் மூத்த மகன்.
கோசல நாட்டின் அயோத்தியைத் தலைநகராகக் கொண்ட வடபகுதியை பரதனுக்கும், போதானப்பூர் நகரை தலைநகராகக் கொண்ட தென் பகுதியை பாகுபலிக்கும் பங்கிட்டு வழங்கிய ரிஷபதேவர்[3] பின் துறவறம் பூண்டு, இமயமலை நோக்கி பயணமானார். கையிலை எனப்படும் அஷ்டபாத மலையை கடக்கையில், இறைவன் , சமவசராணம் (samavasarana) எனப்படும் தெய்வீகத்தைப் பரப்பும் கூடத்தை ரிஷபதேவருக்கு அமைத்துக் கொடுத்தார்.[4] தனது 84வது அகவையில் கையிலை மலையில் வீடுபேறு அடைந்தார். அவரது உபதேசங்கள் அடங்கிய நூலின் தொகுப்பிற்கு பூர்வ வேதம் என்பர்.[5]
பிற்காலத்தில் பரதன் இந்திய நாட்டின் பேரரசனாகி மறைந்தபின் இந்தியா பாரத வர்சம் என்றும் பரதகண்டம் என்றும் அழைக்கப்படலாயிற்று.[2][6]
பாகுபலி துறவறம் பூண்டு சமண சமயத்தை தென்னிந்தியாவில் பரப்பி வந்தார். பின்னாட்களில் பாகுபலிக்கு சரவணபெலகுளா என்ற ஊரில் மாபெரும் உருவச்சிலை அமைக்கப்பட்டது.
அடிக்குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- Rankin, Aidan (2010). Many-Sided Wisdom: A New Politics of the Spirit. John Hunt Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781846942778.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Titze, Kurt (1998). Jainism: A Pictorial Guide to the Religion of Non-Violence. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120815346.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Jain, Kailash Chand (1991). Lord Mahavira and his times. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120808058.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Cort, John E. (2010). Framing the Jina. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195385021.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Shah, Umakant P. (1987). Jain-Rupa-Mandana. New Delhi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7017-218-7.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)CS1 maint: location missing publisher (link) - Jain, Jyotindra; Fischer, Eberhard (1978). Jaina iconography. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-05260-7.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Chapple, Christopher (1993), Nonviolence to Animals, Earth, and Self in Asian Traditions, SUNY Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-9877-4
- Chatterjee, Ramananda (1932), The Modern Review, vol. 52, Prabasi Press Private, Limited
- Jain, Champat Rai (1929). Risabha Deva - The Founder of Jainism. K. Mitra, Indian Press, Allahabad.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Roychoudhury, P.C. (1956). Jainism in Bihar. patna.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)CS1 maint: location missing publisher (link) - Sangave, Vilas Adinath (2001). Facets of Jainology: Selected Research Papers on Jain Society, Religion, and Culture. Mumbai: Popular prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7154-839-3.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Mittal, J.P. (2006). History of Ancient India: From 7300 BC to 4250 BC. Atlantic Publishers & Dist. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-269-0615-4.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Gupta, Gyan Swarup (1999), India: From Indus Valley Civilisation to Mauryas, Concept Publishing Company, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7022-763-2
- Shah, Natubhai (2004), Jainism: The World of Conquerors, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1938-2