தேவபந்து
தேவபந்து
தியோபந்த் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 29°41′31″N 77°40′37″E / 29.692°N 77.677°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | சகாரன்பூர் மாவட்டம் |
ஏற்றம் | 256 m (840 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 97,037 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 247554 |
வாகனப் பதிவு | UP 11 |
இணையதளம் | http://www.darululoom-deoband.com/english/ |
தேவபந்து (Deoband) (இந்தி: देवबंद, உருது: دیوبند, Devband) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் சகரன்பூர் மாவட்டத்தில் அமைந்த நகரம் ஆகும். தேவபந்து நகரம் தில்லியிலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மாவட்டத் தலைமையிட நகரமான சகாரன்பூர் நகரத்திலிருந்து 41 கிலோ மீட்டர் தொலைவில் தேவபந்து நகரம் உள்ளது.
25 உறுப்பினர்கள் கொண்ட நகராட்சி மன்றம் உடையே தேவபந்து நகரத்தில் புகழ் பெற்ற இசுலாமிய தாருல் உலூம் தேவ்பந்த் (இசுலாமியப் பல்கலைகழகம்),[1]), பாலசுந்தரி கோயில் மற்றும் ஜாமியா திப்பியா யுனானி மருத்தவக் கல்லூரி அமைந்துள்ளது.
மக்கள் தொகையியல்
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தேவபந்து நகரத்தின் மொத்த மக்கள் தொகை 97,037 ஆகும். அதில் ஆண்கள் 53,538; பெண்கள் 43,499 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 812 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 75.23 % ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 79.59 % ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 69.77 % ஆகவும் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆறு வயத்திற்குட்பட்டவர்கள் 12,200 ஆக உள்ளனர். [2] இந்நகரத்தில் உருது, இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் பேசப்படுகிறது.
சமயம்
97,037 மக்கள் தொகை கொண்ட தேவபந்து நகரத்தில் இசுலாமியர்கள் 71.06% ஆகவும், இந்துக்கள் 27.87% ஆகவும், சமணர்கள் 0.44% ஆகவும், கிறித்தவர்கள் 0.25% ஆகவும், சீக்கியர்கள் 0.22% ஆகவும், மற்றவர்கள் 0.16% ஆகவும் உள்ளனர்.
மேற்கோள்கள்
- ↑ Introduction Deobandi Movement- Deoband
- ↑ [ http://www.census2011.co.in/data/town/800637-deoband.html Deoband Population Census 2011]